மக்கள் பிரதிநிதியான வைகோவை கைது செய்தது தவறு: வி.பி. சிங்
சென்னை:
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மதிமுக பொதுச் செயலாளரான வைகோவை பொடா சட்டத்தின்கீழ் கைது செய்தது தவறு என்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் சிங் பேசுகையில்,
வைகோ என்ன தேச விரோதியா? மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ள அவரை பொடாசட்டத்தின் கீழ் கைது செய்தது பெரும் தவறு.
பொடா சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
அயோத்தி பிரச்சனை தீர அங்கு அனைத்து மத ஆராய்ச்சி மையம் நிறுவப்பட வேண்டும்.
மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தைஏற்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
ஈராக் மீது போர் தொடுக்க நினைக்கும் அமெரிக்காவின் முயற்சியை இந்தியா கண்டிக்க வேண்டும்.இந்தப் போரினால் ஈராக்குக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்குமே ஆபத்து உள்ளது என்றார்சிங்.
முன்னதாக சென்னை-பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மையத்தில் சமூக நீதிக்கானவக்கீல்கள் பேரவையை சிங் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
நாட்டில் பலருக்கும் திறமை இருக்கும் போதிலும் போதிய அளவு பணம் இருந்தால்தான் படிக்கும்வாய்ப்போ வேலை வாய்ப்போ கிடைக்கிறது. பணம் இல்லாததாலேயே பெரும்பாலான மக்கள்திறமை இருந்தும் நிராகரிக்கப்படுகிறார்கள்.
எனவேதான் இட ஒதுக்கீடு கேட்கிறோம். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும். இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. அது மக்களின் உரிமை.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதுதான் இடஒதுக்கீட்டுக் கொள்கையாகும்.
சமூக நீதியைப் பாதுகாப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மையான இடத்தை வகிக்கிறது.
மொழி என்பது மாநில மக்களின் சுய உரிமை. இதை அனைவரும் மதிக்க வேண்டும். பாதுகாக்கவும்வேண்டும் என்றார் சிங்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி, சமூக நீதிப் பேரவை தலைவர் ஜெகவீர பாண்டியன்உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications