மாநகராட்சி பட்ஜெட்: சென்னை சாலைகளை சீரமைக்க ரூ.122 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியின் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்சாலைகளைச் சீரமைப்பதற்காக ரூ.122.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இன்றைய கூட்டத்தில் மாநகர துணை மேயரான "கராத்தே" தியாகராஜன் தொடக்க உரையாற்றினார்.ஆனால் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேயருக்கான அதிகாரங்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்கண்டித்த பிறகும் அதை மீறும் வகையில் "கராத்தே" தொடக்க உரையாற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

பின்னர் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக அவையிலிருந்துவெளிநடப்பு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் சென்னை மாநகராட்சி திமுக தலைவர் சி.பி.மலையன் பேசுகையில்,

மேயருக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கடுமையாகக்கண்டித்த போதிலும் அதை துணை மேயர் மீறியுள்ளார். எனவே அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.

பட்ஜெட் கூட்டத்தில் தொடக்க உரையாற்றுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனாலும்நீதிமன்ற உத்தரவையும் "கராத்தே" மீறியதால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் கலைவாணன் சமீபத்தில் ஹைதராபாத்திற்குச் சென்றுவந்ததையும் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இதற்குப் பொறுப்பேற்று கலைவாணனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்றார் மலையன்.

திமுகவும் காங்கிரஸும் வெளிநடப்பு செய்த பின்னர் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது. அடுத்த நிதி ஆண்டில் ரூ.511.09 கோடி வரவும், ரூ.508.83 கோடி செலவும்ஏற்படும் என்று இந்த பட்ஜெட் தெரிவிக்கிறது.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதி சீரமைப்புக் கமிட்டியின் தலைவர் விஜய ராமகிருஷ்ணாதாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

  • சென்னை-பெருங்குடி பகுதியில் ரூ.180 கோடி மதிப்பில் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார். தினசரி 15 மெகாவாட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும்.
  • ரூ.84 கோடி மதிப்பில் மழையினால் சேதமடைந்த சென்னை சாலைகள் புதுப்பிக்கப்படும். இவற்றில் பாதி சாலைகளில் பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள சாலைகளில் வரும் நிதியாண்டிற்குள் பணிகள் முடிந்து விடும்.
  • 84 கி.மீ. தொலைவு கொண்ட 150 சாலைகளை ரப்பர் சாலைகளாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • தண்ணீர் லாரிகள் அடிக்கடி செல்லும் 14 கி.மீ. தொலைவுள்ள 17 சாலைகள், ரூ.27 கோடியில் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படும்.
  • சென்னையில் ரூ.11.5 கோடி செலவில், புது மேம்பாலங்கள் கட்டப்படும். கட்டுமானத்தில் உள்ள பழைய மேம்பாலப் பணிகளும் இதில் அடங்கும்.
  • நகரின் பல்வேறு பகுதிகளில் 2000 புது தெரு விளக்குகள் பொருத்தப்படும். ஐந்து முக்கிய தெருக்கள், சாலைகளின் சந்திப்புகளில் உயர்மட்ட, ஒளி வெள்ள மின் கோபுர விளக்குகள் பொருத்தப்படும்.
"கராத்தே" பேட்டி:

இதற்கிடையே பட்ஜெட் குறித்து "கராத்தே" தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,

ஜெயலலிதாவின் உத்தரவுப்படி சென்னை நகர மக்களுக்கு வரியில்லாத பட்ஜெட்கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்துவதற்கு இதுவரை இருந்து வந்த பழைய முறை மாற்றப்பட்டு, முற்றிலும்கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட முறையில் வரி வசூலிக்கப்படும் என்றார் "கராத்தே".

இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பெண் கவுன்சிலர்கள் அனைவரும்ஜெயலலிதாவின் படம் பொறிக்கப்பட்ட சேலையுடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+