ரூ.5 கோடி ஹெராயினை பஸ்சில் கடத்திய வாலிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பஸ்சில் ராமநாதபுரத்திற்குக் கடத்திச்செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஹரி பிரதாபன் என்ற வாலிபர் ரூ.5 கோடி ஹெராயின் போதைப் பொருளுடன் பஸ்சில்ராமநாதபுரம் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுராந்தகம் அருகேமோச்சேரி சந்திப்பு என்ற இடத்தில் பஸ்சை நிறுத்தி சோதனையிட்டபோது ஹரி பிரதாபன்ஹெராயினுடன் இருந்தது தெரிய வந்தது.
இதற்கு முன் இரண்டு முறை இவ்வாறு ஹெராயின் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய ஹரி, இந்தஹெராயின் இலங்கைக்குக் கடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
-->












Click it and Unblock the Notifications