ஆயுதங்களுடன் வந்த புலிகளின் கப்பல் மூழ்கடிப்பு
கொழும்பு:
ஏராளமான ஆயுதங்களைக் கடத்தி வந்த புலிகளின் கப்பலை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர்.
வட கிழக்கு இலங்கையில் உள்ள முல்லைத் தீவு கடல் பகுதியில் இன்று காலை அடையாளம்தெரியாத ஒரு கப்பல் வந்து கொண்டிருந்ததை கடற்படையினர் கண்டனர். இதையடுத்து அந்தக்கப்பலைச் சுற்றி வளைத்த கடற்படையினர் அதில் ஏராளமான ஆயுதங்கள் இருப்பதைக் கண்டனர்.அதில் சில விடுதலைப் புலிகளும் இருந்தனர்.
இதையடுத்து அந்தக் கப்பல் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். உடனே புலிகளும்பதிலுக்குச் சுட்டனர். இதில் நான்கு கடற்படையினர் குண்டுக் காயம் அடைந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்த நிலையில் வேறு சில கடற்படைகப்பல்களும், இலங்கை விமானப் படை விமானங்களும் அப்பகுதிக்கு விரைந்தன.
இதையடுத்து கடற்படையினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தியதில் புலிகளின் கப்பல்கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியது. ஆனால் அதில் இருந்தவர்களின் கதி என்னவாயிற்றுஎன்று தெரியவில்லை.
தகவல் அறிந்து நார்வே தூதுக் குழு மற்றும் இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள்சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஐந்தாவது சுற்று அமைதிப் பேச்சு தொடங்கிய கடந்த பிப்ரவரி 7ம் தேதி ஆயுதங்களைக் கடத்தியதாககடற்படையினரிடம் பிடிபட்ட மூன்று கடற்புலிகள் தங்கள் படகை வெடிக்கச் செய்து தற்கொலைசெய்து கொண்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.
மேலும் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஜப்பானில் இரு தரப்பினருக்கும் இடையேயானஆறாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைதி பேச்சை எதிர்த்து..
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை எதிர்த்து கொழும்பில் இன்று பேரணிநடைபெறுகிறது.
இலங்கையில் உள்ள முக்கிய எதிர்க் கட்சிகள் நடத்தும் இந்தப் பேரணியில் சுமார் 5 லட்சம் பேர்கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகலுக்கு மேல் நடக்கவுள்ள இந்தப் பேரணியையொட்டி கொழும்பு மட்டுமல்லாமல்இலங்கை முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications