ரெளடிகளை ஒழிப்போம்: மதுரை, சேலம் புதிய போலீஸ் அதிகாரிகள் சபதம்
மதுரை & சேலம்:
மதுரை சரக டி.ஐ.ஜியான கந்தசாமி மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பைஏற்றுள்ளார்.
ஐ.ஐ.டியில் பயின்று பின்னர் ஐ.பி.எஸ். அதிகாரியானவர் கந்தசாமி. இதுவரை தஞ்சாவூர் மாவட்டஎஸ்.பியாகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடந்த காவல்துறை மாற்றங்களின்போது மதுரை சரகடி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். இப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனராகவும் கூடுதல்பொறுப்பை ஏற்றுள்ளார்.
மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
மதுரையில் ரெளடிகளை ஒழிப்பதும், மக்கள் பணியில் ஈடுபடுவதுமே என்னுடைய முதல்வேலையாக இருக்கும்.
மதுரையில் அநியாய வட்டிக்கு பணத்தைக் கொடுத்து மக்களைத் துன்புறுத்துபவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கந்தசாமி.
மதுரை போலீஸ் கமிஷனராகப் பதவி ஏற்கும் ஒவ்வொரு அதிகாரியும் இதுபோலத்தான் கூறிக்கொண்டிருந்தனர். ஆனாலும் கந்து வட்டிக் கொடுமையும், ரெளடிகள் தொல்லையும் இன்னும்மதுரையில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
சேலத்தில் அதிரடி அதிகாரி:
இதற்கிடையே சேலம் மாவட்ட எஸ்.பியாக பொன் மாணிக்கவேல் இன்று பதவியேற்றுக்கொண்டார். பொதுமக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும்வெள்ளிக்கிழமைகளில் தன்னைச் சந்தித்து மனு கொடுக்கலாம் என்றும் அவர் நிருபர்களிடம்தெரிவித்தார்.
இதற்கு முன் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் மாணிக்கவேல். அதிகாரிகளைவேலை வாங்கவும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவார், ரெளடிகளை தானே விரட்டிச் சென்று பிடித்துஅடித்து உதைப்பார்.
அதிரடியான அதிகாரியான இவர் தான் போகும் இடங்களில் எல்லாம் ரெளடிகள் கொட்டத்தைஅடக்கிக் காட்டயவராவார். இனி சேலம் மாவட்ட ரெளடிகளுக்கு இவர் பாடம் புகட்டுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை சேலம் மாவட்ட எஸ்.பியாக இருந்த மாகாலி, டி.ஐ.ஜியாக பதவி உயர்த்தப்பட்டு வேலூர் சரகத்தில்நியமிக்கப்பட்டுள்ளார்.
2 பேர் குண்டர் சட்டத்தில் கைது:
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் டைம் பாம் வைத்ததாகக் கைது செய்யப்பட்ட ஷபீர்மற்றும் நெளஷாத் ஆகிய இரண்டு பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்தில் கைதானால் ஒரு வருடத்துக்கு ஜாமீன் கிடைக்காது. கேள்வியே இல்லாமல் ஒரு வருடம் உள்ளே இருந்து தான் ஆகண்ேடும்.
இந்த இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக இப்போது சிறையில் உள்ள கேரளத்தைச் சேர்ந்தமதானிக்கு செல்போனைத் தர முயன்றார் அவரது மனைவி. அதை போலீசார் தடுத்துவிட்டதால் அதற்குப் பதிலடியாக இந்தஇருவரும் பத்திரிக்கையாளர் சங்கம் நடத்தி வரும் டெலிபோன் பூத்தில் குண்டு வைத்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications