நாகப்பா கொலையில் கர்நாடக அமைச்சருக்கு தொடர்பு?
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா படுகொலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த தற்போதையஅமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று நாகப்பாவின் மருமகனான கிரன் பட்டேல் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா, பின்னர்டிசம்பர் 8ம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் செங்கடி வனப் பகுதியில்கண்டெடுக்கப்பட்டார்.
நாகப்பாவை தான் கொலை செய்யவில்லை என்று வீரப்பன் பின்னர் கேசட் அனுப்பியிருந்தான்.தற்போது அவனைத் தேடி தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் காட்டுகக்குள் தீவிர வேட்டையாடிவருகின்றனர்.
நாகப்பா கொலை தொடர்பாக கர்நாடக அரசு விசாரணை கமிஷன் ஒன்றையும் அமைத்துள்ளது.
அவரை யார் கொன்றார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கும் நிலையில் கிரண் பட்டேல் நேற்றுஹூப்ளியில் நிருபர்களிடம் பேசுகையில்,
என் மாமாவின் (நாகப்பா) கொலையில் தற்போது கர்நாடக அமைச்சராக உள்ள ஒருவர்சம்பந்தப்பட்டுள்ளார். மேலும் அவரைக் கடத்திச் செல்வதற்கு பல முக்கியப் பிரமுகர்களும்உடந்தையாக இருந்துள்ளனர்.
அந்த அமைச்சரின் பெயரையும் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களையும் விரைவில்வெளியிடுவேன்.
எங்கள் குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்தபோது இதைக்கண்டுபிடித்துள்ளோம். இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில்விரைவில் வழக்கு தொடருவோம்.
இந்தக் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என் மாமாவின்கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நாங்கள் தொடர்ந்துபோராடுவோம் என்றார் கிரண் பட்டேல்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications