ஒசாமா தலைக்கு ரூ.125 கோடி: அமெரிக்கா அறிவிப்பு
துபாய்:
சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.125 கோடிபரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அடங்கிய நோட்டீஸ்களை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்எல்லைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் வீசி வருகின்றன.
பின் லேடனின் நெருங்கிய கூட்டாளியும் செப்டம்பர் 11 தாக்குதலின் முக்கியக் குற்றவாளியுமானகாலித் ஷேக் முகமது சமீபத்தில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பின் லேடனும் பாகிஸ்தானில்தான்தங்கியிருப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஏராளமான நோட்டீஸ்களைஅமெரிக்கா விமானங்கள் கொட்டி வருகின்றன. பின் லேடனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குரூ.125 கோடி பரிசு வழங்கப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பின் லேடன் பதுங்கி இருக்கலாம் என்று அமெரிக்கா கருதுவதால் ஆப்கானிஸ்தான்எல்லைப் பகுதிகளில் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பல கிராமங்களிலும் இதுபோன்ற நோட்டீஸ்கள்எறியப்பட்டு வருகின்றன.
ஆனால் பின் லேடன் பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று அந்நாட்டின் தகவல் தொடர்புஅமைச்சரான ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார். பின் லேடன் உயிரோடு வேண்டுமானால்இருக்கலாம், ஆனால் தங்கள் நாட்டில் அவன் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் காலித் முகமதுவைத் தாங்கள்தான் பிடித்ததாகவும், அமெரிக்க புலனாய்வுத் துறையானஎப்.பி.ஐக்கும் அவன் பிடிபட்டதற்கும் சம்பந்தமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எப்.பி.ஐயும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையும் சேர்ந்துதான் காலித் முகமது உள்ளிட்ட மூன்றுஅல்-கொய்தா தீவிரவாதிகளை ராவல் பிண்டியில் சமீபத்தில் சுற்றி வளைத்துப் பிடித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது எப்.பி.ஐ. தொடர்பு இருப்பதை பாகிஸ்தான் அமைச்சர்மறுத்துள்ளார்.
இதற்கிடையே அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும்ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், இரண்டு ஆப்கானியர்களும் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில்பிடிபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications