ஈராக்: ராணுவ அதிகாரிகளுடன் வாஜ்பாய் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஈராக்கில் போர் ஏற்பட்டால் இந்திய ராணுவம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,தெற்காசியாவிலும் வளைகுடாவிலும் இதனால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான குழப்பங்கள்ஆகியவை குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் வாஜ்பாய் முக்கிய ஆலோசனைநடத்தினார்.

ராணுவ தலைமையகத்தின் ஆபரேசன்ஸ் ரூம் எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் இந்தஆலோசனை நடந்தது.

ஈராக் தன்னிடம் உள்ள பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்கு வரும் 17ம் தேதிதான் கடைசி நாள்என்று அமெரிக்காவும் பிரிட்டனும் கெடு விதித்துள்ளன.

மேலும் அடுத்த ஒரு சில நாட்களில் ஈராக்கைத் தாக்குவது தொடர்பான இரண்டாவதுதீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் இரு நாடுகளும் கொண்டு வர உள்ளன.

இதையடுத்து வளைகுடா பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் போர்வெடிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் வளைகுடா போர் ஏற்பட்டால் அதை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்என்பது குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் வாஜ்பாய் நேற்று மாலை முக்கிய ஆலோசனைநடத்தினார்.

துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரும் இந்தஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே ஈராக் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும்வாஜ்பாய் கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக எதிர்க் கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறுபதிலளிப்பது என்பது குறித்தும் நேற்றைய ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வளைகுடா போர் இந்தியாவுக்குப் பரவினால் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இந்தக்கூட்டத்தில் ராணுவ அதிகாரிகள் விளக்கிக் கூறினர். சுமார் இரண்டு மணி நேரம் வரை இந்தஆலோசனைக் கூட்டம் நீடித்தது.

ஆனால் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+