கோபி நீதிமன்றத்தில் "நக்கீரன்" கோபால் ஆஜர்
கோபிச்செட்டிப் பாளையம்:
சென்னை நீதிமன்றத்தின் முன் ஜாமீன் நிபந்தனைப்படி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா முன்பாக "நக்கீரன்" பத்திரிக்கை ஆசிரியர்கோபால் ஆஜரானார்.
அந்தியூரைச் சேர்ந்த டீக்கடைக்காரர் கந்தவேல், கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர் பக்தவச்சலம்ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் கோபாலும் ஒரு குற்றவாளியாகச்சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான்.
முதலில் இந்த இரு வழக்குகளும் கைவிடப்படும் நிலையில் இருந்தன. ஆனால் கடந்த 2001ம்ஆண்டு நவம்பர் மாதம் கந்தவேல் கொலை வழக்கும், டிசம்பர் 3ம் தேதி பக்தவச்சலம் கொலைவழக்கும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
"நக்கீரன்" நிருபர் சிவசுப்ரமணியம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குகளில்கோபாலின் பெயர் சேர்க்கப்பட்டது. மேலும் "நக்கீரன்" நிருபர்களான ஜீவா தங்கவேல், பாலமுருகன்,மகரன் ஆகியோரும் இந்த இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக கோபாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்சமீபத்தில் கோபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் அளிக்கப்பட்டது. ஏதாவது ஒருநீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி கோபிச்செட்டிப் பாளையம் நீதிமன்றத்தில் ஆஜரானார் கோபால். அங்கு நீதிபதி சசிகலாமுன்பு ஆஜரான அவர் சொந்த ஜாமீனுக்காக ரூ.25,000 கட்டினார். மேலும் கேசவன் மற்றும் லட்சுமிநாராயணன் ஆகியோரது சொத்துக்களின் பேரிலும் அவர் நீதிபதியிடம் உத்தரவாதம் கொடுத்தார்.
மேலும், வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அழைக்கும் நேரத்தில் ஆஜராகதயார் நிலையில் உள்ளதாகவும் உறுதி அளித்தார் கோபால்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications