ஊரை ஏமாற்றும் வாஜ்பாய், அத்வானி: ஜெயந்தி நடராஜன் கடும் தாக்கு
சென்னை:
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் மசோதை நிறைவேற்றாமல் பிரதமர் வாஜ்பாயும், துணைப்பிரதமர் அத்வானியும் எல்லோரையும் ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயந்திநடராஜன் குற்றம் சாட்டினார்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இதற்கு முலாயம் சிங்யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறிவருகிறது.
இரு தினங்களுக்கு முன் வாஜ்பாய் தலைமையில் இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.அப்போதும் அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதற்கு மத்திய அரசின் மெத்தனம்தான் காரணம் என ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று சென்னையில் மகளிர் மசோதா நிறைவேறாததைத் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது. இதற்குத் தலைமைவகித்த ஜெயந்தி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
பொடா சட்டத்துக்குக் கூடத் தான் அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆனால், அதைமட்டும் மத்திய அரசு நிறைவேற்றியது எப்படி? பொடா சட்டததைக் கொண்டுவர மத்திய அரசும், பிரதமரும்,துணைப்பிரதமர் அத்வானியும் படாதபாடு பட்டார்கள். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி சட்டத்தைநிறைவேற்றினார்கள்.
ஆனால், அவர்களுக்கு மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டு வர மட்டும்தெரியவில்லையாம். இந்தச் சட்டத்தைக் கொண்டு வரும் அக்கறை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குவேண்டிய சட்டத்தை மட்டும் கொண்டு வரத் தெரிகிறது. இதைக் கொண்டு வரத் தெரியவில்லையோ?
இப்போது மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தந்த பின்னரும் கூடஅதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாயும் துணைப் பிரதமர் அத்வானியும் இந்தவிஷயத்தில் ஊரை ஏமாற்றி வருகின்றனர் என்றார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications