திமுக கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்: சென்னை மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தின்போது துணை மேயர் "கராத்தே" தியாகராஜனால் வெளியேற்றப்பட்ட திமுககவுன்சிலர்கள் மாநகராட்சி வளாகத்திலேயே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது மதிமுகஉறுப்பினரான அம்பிகாபதி குறுக்கிட்டு ஒரு விஷயம் தொடர்பாக பேச முயன்றார்.
ஆனால் அவருக்கு "கராத்தே" அவருக்கு அனுமதி மறுத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். உறுப்பினர்கள் பேசும்போது துணை மேயர் குறுக்கிடக் கூடாது என்றும் அவர்கள் கோஷம்போட்டனர்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் ஆட்சேவம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கூச்சல், குழப்பம்ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை.
இந்நிலையில் முன்னாள் மேயர் ஸ்டாலின் குறித்து "கராத்தே" ஏதோ கூற, அதை சில திமுக உறுப்பினர்கள்கடுமையாக எதிர்த்தனர். உடனே அவர்களை அவையை விட்டு வெளியேற்றுமாறு கராத்தே தியாகராஜன்உத்தரவிட்டார்.
ஆனால் இதை மற்றொரு திமுக கவுன்சிலரான ராஜேந்திர பாபு கடுமையாக எதிர்க்கவே அவரையும் வெளியேற்றதுணை மேயர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மூன்று திமுக கவுன்சிலர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்துஅவையில் இருந்த மற்ற திமுக உறுப்பினர்களும் இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் மாநகராட்சி வளாகத்தில் கூடிய அனைத்து திமுக கவுன்சிலர்களும் அங்கேயே அமர்ந்து "கராத்தே"யைக்கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மாநகராட்சி வளாகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications