சி.பி.ஐ. விசாரிக்க கோபால் கோரிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
தன் மீதான கொலை வழக்கு விசாரணைகளை சி.பி.சி.ஐ.டியிடமிருந்து சி.பி.ஐக்கு மாற்றக் கோரி "நக்கீரன்" கோபால்தாக்கல் செய்துள்ள மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு தமிழக அரசுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்தியூர் டீக்கடைக்காரர் கந்தவேல், கோயம்புத்தூர் மாணவர் பக்தவச்சலம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவழக்குகளில் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கோபாலும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்குகளில் கோபாலுக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், அவரை ஏதாவது ஒரு நீதிமன்றத்தில்ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜரான கோபால் ரூ.25,000 சொந்தஜாமீன் கட்டினார்.
இதற்கிடையே தன் மீதான இந்த இரு கொலை வழக்குகளையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளசி.பி.சி.ஐ.டியிடமிருந்து சி.பி.ஐக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றத்தில் கோபால் மனு தாக்கல் செய்திருந்தார். மாநிலஅரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் அது நியாயமான விசாரணையாக இருக்காது என கோபால் தனது மனுவில்குறிப்பிட்டுள்ளார். எனவே, சி.பி.ஐ. மூலம் இதனை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை இன்று நீதிபதி சதாசிவம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். பின்னர், இது தொடர்பாக ஒருவாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக உள்துறைச் செயலாளருக்கும், சி.பி.சி.ஐ.டிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிஉத்தரவிட்டார்.
இதையடுத்து வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு இந்த மனு
மீதான அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக எழுதியதால் தன்னை வீரப்பனுடன் சேர்த்து கொலை வழக்குகளில் தமிழக போலீசார்சிக்க வைத்திருப்பதாக கோபால் கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications