45 பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் விபத்தில் சிக்கியதாக புரளி: மதுரையில் பதற்றம்
மதுரை:
மதுரையில் பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் விபத்தில் சிக்கியதாகப் புரளி கிளம்பியதைத் தொடர்ந்துஅவர்களுடைய பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை இட்டனர்.
மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த சுமார் 45 குழந்தைகள் பள்ளி வேனில் இன்று காலைஅழகர்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அழகர்கோவிலுக்குச் செல்லும் வழியிலேயே அந்த வேன் விபத்தில் சிக்கி விட்டதாக யாரோ சிலர் புரளியைக்கிளப்பி விட்டுள்ளனர். இந்தப் புரளிச் செய்தி சிறிது சிறிதாக அந்தக் குழந்தைகளுடைய பெற்றோர்களின்காதுகளில் விழ ஆரம்பித்தது.
இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர். கண்ணீரும் கம்பலையுமாகஅவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தங்கள் குழந்தைகளின் கதி என்னவாயிற்று என்று அவர்கள் விசாரித்தனர்.
ஆனால் குறிப்பிட்ட அந்த வேன் எந்த விபத்திலும் சிக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டது.
இருந்தாலும் பெற்றோர்கள் கண்ணீருடன் பள்ளி வளாகத்திலேயே கூடி நின்று கொண்டிருந்தனர். சம்பந்தப்பட்டவேன் அழகர்கோவிலிலிருந்து திரும்பி வந்தால்தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரிய வரும்.
-->


Click it and Unblock the Notifications
