காளிமுத்துவின் உதவியாளருக்கு கத்திக் குத்து
சென்னை:
சபாநாயகர் காளிமுத்துவின் உதவியாளர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார்.சபாநாயகரின் வீட்டு வாசலிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது.
காளிமுத்துவின் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் ஜெயப்பிரகாஷ். இவர் மதுரை மாவட்டம்திருமங்கலத்தை அடுத்துள்ள சவரப்பேட்டையைச் சேர்ந்தவர்.
இதே ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் ஜெயப்பிரகாஷுக்கும் இடையே கொடுக்கல்,வாங்கல் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னை-ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளிமுத்துவின் வீட்டிலிருந்து இன்றுகாலை ஜெயப்பிரகாஷ் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் மறைவிடத்தில்பதுங்கி இருந்த பாண்டியராஜன் திடீரென்று அவர் மீது பாய்ந்தார்.
பின்னர் ஜெயப்பிரகாஷின் வயிற்றில் கத்தியால் சராமாரியாகக் குத்தினார் பாண்டியராஜன்.இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஜெயப்பிரகாஷ் உடனடியாகசென்னை-ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கத்தியால் குத்தி விட்டுத் தப்பி ஓட முயன்ற பாண்டியராஜனை காளிமுத்துவின் வீட்டில்காவலுக்கு நின்றிருந்த போலீசார் விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவர் அருகில் உள்ள அபிராமபுரம்போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பாண்டியராஜனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications