ரூ.1.47 கோடி நில மோசடி அம்பலம்: மதுரையில் திமுக எம்.பி. அதிரடி கைது
மதுரை:
கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தபோது நிலம் வாங்கி, விற்றதில் ரூ.1.47 கோடி மோசடி செய்ததுதொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி. அக்னிராஜ் உள்ளிட்ட 4 பேரை பொருளாதார குற்றப் பிரிவுபோலீசார் கைது செய்தனர்.
மதுரை-திருநகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் நிலம் வாங்கி, விற்றதில் கோடிக்கணக்கானரூபாய் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இச்சங்கத்தின் தலைவராக அக்னிராஜ் பதவி வகித்து வந்தபோதுதான் இந்த மோசடிநடைபெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 1997 முதல் 2001 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தபோது சுமார் ரூ.1.47 கோடி வரைமோசடி செய்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் சமீபத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாகமதுரை மாவட்ட வீட்டு வசதி வாரிய துணை ஆணையர் புகார் செய்தார். இதன் பின்னர் நடைபெற்றவிசாரணையின் போதுதான் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அக்னிராஜ், கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் இயக்குநர்களான சுரேந்திரன், சாமுவேல்மாணிக்கம் மற்றும் முருகன் ஆகிய நான்கு பேரையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் இன்றுகாலை திருநகரில் கைது செய்தனர்.
புதூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரிடமும் போலீசார் விசாரணைநடத்தினர். பின்னர் அவர்கள் பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,இப்பிரச்சனையை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் அக்னிராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications