ஜெயாவை தரக் குறைவாக பேசிய வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் இளங்கோவன் ஆஜர்
மதுரை:
முதல்வர் ஜெயலலிதாவை தரக் குறைவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மதுரையை அடுத்த உத்தமபாளையத்தில் சமீபத்தில் நடைபெற்ற பேரூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போதுஜெயலலிதாவை இளங்கோவன் மிகவும் தரக் குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர் மீது அரசு வழக்கறிஞர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பானவிசாரணை இன்று நடந்தபோது இளங்கோவன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
"ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசி இருக்கிறேன் என்றால் அவர்தான் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும். அரசு வழக்கறிஞர் வழக்குத் தொடர முடியாது. எனவே, அவர் தொடர்ந்த இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்" என்று கூறி இளங்கோவன் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆனால் நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். பின்னர் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.விசாரணையின் முடிவில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதன் பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில்,
லஞ்சம் வாங்கியது தொடர்பாகவோ, வருமான வரி கட்டவில்லை என்றோ என் மீது இந்த தமிழக அரசால் வழக்குதொடர முடியாது.
அதனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பயந்துபோய் நான் அடங்கி விட மாட்டேன். ஜெயலலிதாவின் தவறுகளை இன்னும் அதிகமாக நான் சுட்டிக் காட்டுவேன்.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் வந்து ஆஜராக வேண்டும். அவரிடம் நான் குறுக்கு விசாரணை நடத்துவேன்என்றார் இளங்கோவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications