மகனுக்கு அப்பா புஷ் ஆதரவு
வாஷிங்டன்:
ஈராக் மீது தாக்குதல் நடத்தும் அதிபர் புஷ்சின் முடிவுக்கு அவரது தந்தையும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் புஷ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
1991ம் ஆண்டில் இவர் தான் ஈராக்கைத் தாக்கி குவைத்தை விடுவித்தார். அவரது நிர்பந்தத்தால் தான் மீண்டும் ஈராக்கைத் தாக்க மகன் முடிவுசெய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் புஷ் குடும்பத்தினருக்கு அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு இருப்பதாகவும் அவர்களுக்குஉதவவே இந்தப் போரை புஷ் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் ஏ.பி.சி. தொலைக்காட்சிக்கு அப்பா புஷ் அளித்த பேட்டியில், ஈராக்கைத் தாக்கும் அதிபரின் முடிவை முழுமையாகவரவேற்கிறேன். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இருந்து நான் ஒதுங்கி இருக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.
தப்பினார் டோனி பிளேர்:
ஈராக் மீது அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து தாக்குதல் தொடுக்கும் பிரிட்டிஷ் அரசின் முடிவுக்கு அந் நாட்டு நாடாளுமன்றம் கடும்எதிர்ப்புக்கு இடையே அனுமதி கொடுத்தது.
தனது தொழிலாளர் கட்சியிலேயே எதிர்ப்பு கடுமையாக இருந்ததால் இந்தப் போரில் பிரிட்டன் படைகள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனபிரதமர் டோனி பிளேர் கூறியிருந்தார். ஆனால், தனிப்பட்ட முறையில் அனைத்து எம்.பிக்கள், முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்தியபின்னர் தாக்குதலுக்கு ஆதரவு கோரும் தீர்மானத்தை டோனி பிளேர் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி முழு ஆதரவு தந்தது. இதனால் தனது கட்சி எம்.பிக்களின் பலத்த எதிர்ப்பையும்மீறி இத் தீர்மானத்தை பிளேர் நிறைவேற்றினார்.
412 எம்.பிக்கள் இத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், டோனி பிளேரின் கட்சியைச் சேர்ந்த 149 எம்.பிக்கள் இதைஎதிர்த்து வாக்களித்தனர்.
முன்னதாக பிளேரின் போர் முடிவை எதிர்த்து 2 அமைச்சர்களும், முன்னாள் அமைச்சரும் எம்பியும் பதவியை ராஜினாமா செய்ததுநினைவுகூறத்தக்கது.
இதற்கிடையே ஜோர்டன், லெபனான், ஏமன், பஹ்ரைன், ஒமான் ஆகிய நாடுகளில் உள்ள தனது நாட்டினரை உடனடியாக வெளியேறுமாறுபிரிட்டன் உத்தரவிட்டுள்ளது. ஈராக் மீது தாக்குதல் தொடங்கியவுடன் இந்த நாடுகளில் உள்ள பிரிட்டிஷார் மீது அல்கொய்தா தாக்குதல்நடத்தும் என்று அஞ்சப்படுகிறது.
ஸ்பெயின் படைகள் பங்கேற்பில்லை:
இந் நிலையில் அமெரிக்காவைத் தீவிரமாக ஆதரித்து வரும் ஸ்பெயின் தனது படைகளை ஈராக்கைத் தாக்க அனுப்பப் போவதில்லை எனஅறிவித்துள்ளது.
அந் நாட்டு பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னர் இதனைத் தெரிவித்தார்.
போன் தொல்லை தரும் ரஷ்ய நிறுவனம்:
ஈராக் மீதான போரை எதிர்ப்பவர்களுக்கு ரஷ்யாவின் பேஜர் சர்வீஸ் நிறுவனம் ஒரு சலுகையை அளித்துள்ளது.
இங்கிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு இலவசமாக தொலைபேசியில் பேச வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால்ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டு போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கடுப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.எகாதெரின்பர்க் என்ற இடத்தில் உள்ள இந்த நிறுவனம் இதற்காகவே பல தொலைபேசிகளை ஒதுக்கியுள்ளது.
அமெரிக்கர்கள், பிரிட்டிஷார் தவிர யார் வேண்டுமானாலும் இந்தத் தொலைபேசிகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
அதே போல ரஷ்யாவின் பல நகர்களிலும் உள்ள ஹோட்டல்களில் அமெரிக்கர்கள், பிரிட்டிஷார் உள்ளே நுழையக் கூடாது என்றும்அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications