முடிகிறது கெடு: எந்த நேரமும் போர் வெடிக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஈராக் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான தாக்குதலால் சர்வதேச அளவில் பிரச்சனைகள் வரும் என இந்தியா கூறியுள்ளது.

துணைப் பிரதமர் அத்வானி இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

அமெரிக்கா தனது செயலின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியத்துவத்தை குலைத்துவிட்டது. இதனால் சர்வதேச அளவில் பிரச்சனைஉருவாகும். எந்தப் பிரச்சனையானாலும் ஐ.நா. தான் முடிவு செய்ய வேண்டும்.

இது தான் இந்தியாவின் நிலை. இதை அமெரிக்காவிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டோம் என்றார்.

சாவு உறுதி: ஈராக் எச்சரிக்கை

ஈராக்கை எளிதாக வென்று விடலாம் என தனது நாட்டு வீரர்களுக்கு அமெரிக்கா பொய்யான தகவலைத் தந்து வருவதாக ஈராக் நாட்டுசெய்தித்துறை அமைச்சர் சயீத் அல் சகாப் கூறியுள்ளார்.

ஈராக்கில் நுழையும் அமெரிக்கர்களை கொன்று குவிப்போம். இது பிக்னிக் மாதிரி இருக்காது என்பதை மட்டும் அமெரிக்க வீரர்களுக்குச்சொல்லிக் கொள்கிறோம் என்றார்.

நாளை போர்:

அமெரிக்காவின் கெடு இன்றுடன் முடிவடைவதால் நாளை (வியாழக்கிழமை) ஈராக் மீது தாக்குதல் தொடங்கும் என ஆஸ்திரேலியவெளியுறவுத்து அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் தெரிவித்தார்.

ஆனால், தாக்குதல் தொடங்கும் நேரத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்கா வெளியிட மறுத்து வருகிறது. கிரீன்வீச் நேரப்படிநள்ளிரவு 1 மணிக்கு இந்தக் கெடு முடிவடைகிறது என்று மட்டும் பென்டகன் கூறியுள்ளது.

ஈராக்கைத் தாக்க இன்று இரவு தங்களுக்கு உத்தரவு வந்துவிடும் என எதிர்பார்ப்பதாக குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகள்கூறியுள்ளன.

ஈராக்குக்கு பிரான்ஸ் எச்சரிக்கை:

இந்தப் போரை தீவிரமாக எதிர்த்து வரும் பிரான்ஸ் அதே நேரத்தில் ஈராக்குக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

போரின்போது பேரழிவு ஆயுதங்களான அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்களை ஈராக் பயன்படுத்தினால் நாங்களும் சேர்ந்து ஈராக்கைத்தாக்குவோம் என பிரான்ஸ் கூறியுள்ளார்.

ஈராக்கில் பதற்றம்:

நாளை போர் தொடங்கிவிடும் என்பதால் ஈராக்கில் பெரும் பதற்றமும் அச்சமும் பரவியுள்ளது.

உணவுப் பொருள்கள் வாங்க ஏராளமான மக்கள் கடைகளில் குவிந்ததால் கடைகள் அனைத்தும் காலியாகிவிட்டன. நாளை முதல்ஈராக்குக்குள் உணவு சப்ளையும் துண்டிக்கப்பட்டுவிம் என்பதால் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாக உள்ளனர்.

மேலும் மின் சப்ளையும் பாதிக்கப்படும். விமானங்கள் ஆயிரக்கணக்கான குண்டுகளை ஈராக் முழுவதும் வீசும் என்பதால் பதுங்கு குழிகளைஅமைக்கும் பணிகளில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர்.

ஈராக் கப்பல் மீது தாக்குதல்:

இதற்கிடையே ஈராக் மீதான போரை அமெரிக்கா தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. நேற்றிரவு ஈராக்கிய போக்குவரத்துக் கப்பலைஅமெரிக்காவின் யு.எஸ்.எஸ். கன்ஸ்டலேசன் என்ற போர்க் கப்பல் தாக்கியது. இதில் ஈராக்கியர் ஒருவர் கொல்லப்பட்டார். குவைத் அருகே இத் தாக்குதல்நடந்தது.

பாலைவனத்தில் கொட்டப்படும் எண்ணெய்:

இதற்கிடையே ஈராக்கின் தென் பகுதியில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் இருந்து பெட்ரோலியம் வேண்டுமென்றே பாலைவனத்தில் கொட்டப்பட்டுவருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த எண்ணெய்க்குத் தீ வைத்து உள்ளே நுழையும் அமெரிக்கப் படைகளுக்கு தடையை ஏற்படுத்த ஈராக்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் எச்சரிக்கை:

1991ம் ஆண்டு போரைப் போல் அல்லாமல் இந்த முறை எங்கள் நாட்டின் மீது ஈராக் ஏவுகணையைச் செலுத்தினால் நாங்களும் பதிலுக்குத் தாக்குவோம்என இஸ்ரேல் கூறியுள்ளது.

கடந்தமுறை போரின்போது இஸ்ரேல் மீது ஈராக் ஸ்கட் ஏவுகணைகளைச் செலுத்தியது. ஆனால், இஸ்ரேல் திருப்பித் தாக்கவில்லை. இந்த முறை ஈராக்கைபதிலுக்குத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் அது அரேபிய நாடுகளை ஒன்று சேர்த்துவிடும் என்பதால் பதில்தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+