அமைதிப் பேச்சு: யாழ்ப்பாண தமிழர்களுக்கு மறுவாழ்வு
ஹொகேன்:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 6ம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று 2ம் நாளாகஜப்பானில் நடைபெற்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹொகேன் நகரில் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள்நடைபெறுகின்றன. நாளை மறுநாள் வரை இந்தப் பேச்சுக்கள் நீடிக்கும்.
கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடலில் புலிகளின் சரக்குக் கப்பலை இலங்கை கடற்படை மூழ்கடித்த சம்பவம் குறித்துநேற்றைய பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நேராமல் பார்த்துக் கொள்வது என்றும் நேற்றுமுடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அமைதிப் பேச்சுக்கள் தொடர்ந்தன. இன்றையபேச்சுவார்த்தையின்போது யாழ்ப்பாணத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் வட, கிழக்கு இலங்கையில் உள்ள உயர் பாதுகாப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவப் படைகளைஅரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று புலிகள் வலியுறுத்தினர்.
ஆனால் அரசுத் தரப்பினர் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டனர். இப்போதைக்கு அங்குள்ளராணுவத்தினரை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையே புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறார்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டு வருவதாக"பல்கலைக்கழக ஆசிரியர்கள் மனித உரிமை" அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வட, கிழக்கு இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் உள்ள ஒரு சிறுவன் அல்லது சிறுமி தங்கள்இயக்கத்தில் சேர வேண்டும் என்று புலிகள் இயக்கம் வற்புறுத்தி வருவதாகவும் அந்த மனித உரிமை அமைப்புபுகார் கூறியுள்ளது.
இதன் மூலம் ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை புலிகள் மீறியுள்ளனர்என்றும் குற்றம் சாட்டியுள்ளது இந்த மனித உரிமை அமைப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications