அமெரிக்க தாக்குதலில் 1 ஈராக்கியர் பலி, பலர் படுகாயம்
மாஸ்கோ:
ஈராக் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் ஒருவர் பலியானார்.
ஈராக் ராணுவத் தளங்கள், பாதுகாப்புக் கேந்திரங்களைத் தான் குறி வைத்துத் தாக்கி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், தங்களதுடிவி நிலையம், ரேடியோ நிலையம் ஆகியவற்றின் மீதும் பொது மக்களின் வீடுகளின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக ஈராக்கூறியுள்ளது.
இத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சையத் அல் சகாப்கூறினார்.
ரஷ்யா கோரிக்கை:
ஈராக் மீதான போரை உடனே நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், இத் தாக்குதல் மூலம் அமெரிக்கா மிகப் பெரிய அரசியல் தவறைச் செய்துள்ளது. இதனால்உடனே போரை நிறுத்த வேண்டும் என்றார்.
ஜெர்மன்- பிரான்ஸ் ஆலோசனை:
இந்தப் போரை தீவிரமாக எதிர்த்து வரும் பிரான்ஸ் அதிபர் சிராக் இன்று ஜெர்மன் அதிபர் ஸ்ரேடருடன் தொலைபேசியில் விவாதித்தார்.சுமார் 20 நிமிடங்கள் பேசிய அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
தேங்கி கிடக்கும் இந்திய கோதுமை:
ஈராக்குக்கு இந்தியா அனுப்பிய 18,000 டன் கோதுமை போர் காரணமாக வழியிலேயே தேங்கி நிற்கிறது. கோதுமையுடன் சென்ற கப்பல்துபாய் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. ஈராக்குக்கு 6 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்தது.
ஆனால், போர் காரணமாக இதை அனுப்புவதில் பெரும் கால தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications