குவைத்தில் இருந்து 1,200 இந்தியர்கள் நாடு திரும்பினர்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

குவைத்தில் இருந்து 1,200 இந்தியர்களுடன் 4 சிறப்பு விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள்குவைத் விமான நிலையத்தில் காத்துக் கொண்டுள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு முதல் விமானம் வந்து சேர்ந்தது. இரண்டாவது விமானம் 10 மணிக்கு மும்பை வந்தது. முதல் விமானத்தில் 372பயணிகளும் இரண்டாவது விமானத்தில் 396 பயணிகளும் வந்து சேர்ந்தனர்.

மேலும் 240 பேரை ஏற்றிக் கொண்டு 3வது சிறப்பு விமானம் இன்று பகலில் கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. 4வது விமானத்தில்192 பேர் வந்து சேர்ந்தனர்.

மேலும் 400 பயணிகளுடன் ஜம்போ ஜெட் விமானம் மும்பை வழியாக இன்று இரவு கொச்சி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் அதிக அளவில் காத்திருப்பதாக தகவல் வந்ததால் இந்த விமானங்கள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இன்னும் குவைத்தில்இருந்து இந்தியர்களை வெளியேற்றும் திட்டமிட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் இந்திய விமானத்துறை அமைச்சர்ஷானவாஸ் ஹூசேன் கூறினார். தேவைப்பாட்டால் உடனடியாக பணியைத் தொடங்கி ஒரே வாரத்தில் அனைத்து இந்தியர்களையும்திரும்ப அழைத்து வந்துவிட முடியும் என்றும் கூறினார்.

அதற்குத் தேவையான அளவு விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்..

போர் காரணமான தங்கள் நாட்டு மக்களை அழைத்துச் செல்ல குவைத் விமான நிலையத்தில் ஏகப்பட்ட நாடுகளின் விமானங்கள்குவிந்துவிட்டதால் அங்கு பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம்ஏற்பட்டது.

முன்னதாக ஈராக்கில் போர் தொடங்கியவுடன் இன்று காலை முதல் குவைத்துக்கு பல சிறப்பு விமானங்களை ஏர் இந்தியாவும் இந்தியன்ஏர்லைன்சும் இயக்க ஆரம்பித்துள்ளன.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 10 சதவீதம் பேர் குவைத்தில் வசிக்கின்றனர். சுமார் 35 லட்சம் இந்தியர்கள் அங்குள்ளனர்.

இங்குள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்தத் தேர்வுகள் முடிந்தவுடன் ஏராளமான இந்தியக்குடும்பங்கள் பள்ளி விடுமுறையில் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளன.

இந்த நேரத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் விமானங்களை இயக்க முன்னதாகவேதிட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் போரும் ஆரம்பித்துவிட்டதால் திட்டமிடப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையிலான விமானங்களைகுவைத்துக்கு இந்தியா இயக்க ஆரம்பித்துள்ளது.

போரையொட்டி பல குவைத் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய நீண்ட விடுமுறைகளை வழங்கியுள்ளன.இவ்வாறு விடுமுறை கிடைத்த ஊழியர்களும் இந்தியா திரும்ப ஆரம்பித்துள்ளன.

குவைத், சவுதி, கத்தார் ஆகிய நாடுகளில் தான் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதால் இந்த நாடுகளை ஈராக் தாக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. குவைத்தில் இருந்து தான் அமெரிக்கத் தரைப்படை ஈராக்குக்குள் நுழைய உள்ளது. இதனால் குவைத் மீது தாக்குதல்உறுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் குவைத்தில் உள்ள இந்தியர்களிடையே போர் அச்சம் பரவியுள்ளது. அதே நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டியஅளவுக்கு அங்கு நிலைமை மோசமாகிவிடவில்லை. அதற்கான தேவையும் இருக்காது என்று இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

தூதரகம் இவ்வாறு கூறினாலும் நாட்டை விட்டு வெளியேறிவிடவே பெரும்பான்மையான இந்தியர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.

குவைத் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஈராக் படைகளை அமெரிக்கப் படைகள் அனுமதிக்காது என்று தெரிகிறது. ஈராக் படைகளைஅவர்களது நாட்டுக்குள் வைத்தே அமெரிக்கா முடக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்பதால் பேட்ரியாட் ரக ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை குவைத் மற்றும் சவுதிஅரேபியா முழுவதும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+