வாஜ்பாய் தலைமையில் பாதுகாப்பு கமிட்டி கூட்டம்
டெல்லி:
ஈராக்கில் அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியதையடுத்து தேசிய பாதுகாப்பு குறித்த கேபினட் கமிட்டிஉறுப்பினர்களுடம் பிரதமர் வாஜ்பாய் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.
வளைகுடாவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக்கப்பல்களின் நடமாட்டம், இந்திய நீர்மூழ்கிகளை இடம் மாற்றுவது, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு,நாட்டின் பெட்ரோலிய கையிருப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், முப்படைத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூதரகங்களுக்கு பாதுகாப்பு:
இந் நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தூதரகங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்:
அதே போல உலகம் முழுவதும் அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள பாகிஸ்தானில் தனது தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. சில ஊழியர்கள்தவிர மற்ற அனைவரையும் உடனே நாடு திரும்பவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
புஷ்- பிளேர் பேச்சு:
இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் இன்றுதொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications