இந்திய போர் பயிற்சி விமானம் வெற்றிகரமாய் பறந்தது
பெஙகளூர்:
இந்தியாவே தயாரித்துள்ள போர்ப் பயிற்சி விமானம் (Intermediate Jet Trainer -IJT)இன்று மீண்டும் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
பெங்களூரில் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான தளத்தில் இருந்து இந்த விமானம்வெற்றிகரமாகப் பறந்தது.
இந்த விமானத்தின் சோதனையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், விமானப் படைத் தலைவர் கிருஷ்ணசாமிஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ஆத்ரே, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத் தலைவர் மொகந்தி ஆகியோரும்இதனை பார்வையிட்டனர்.
இந்திய விமானப் படையின் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பல்வேத் சிங் இந்த விமானத்தை இயக்கினார். காலை 10.03 மணிக்குடேக்-ஆப் ஆன விமானம் 10.30 மணிவரை வெற்றிகரமாக பல வானில் பல சாகஸங்களைச் செய்துவிட்டு பத்திரமாக தரையிறங்கியது.
விமானப் படையின் ஆரம்பப் பயிற்சிகாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது கிரண் ரக பயிற்சி விமானங்களில் தான்விமானிகளுக்கு பயிற்சி தரப்படுகிறது. இனிமேல் இந்த விமானங்கள் தான் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.
இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக கடந்த 7ம் தேதி இந்தவிமானம் விண்ணில் பறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications