சென்னையில் தீ: 200 குடிசைகள் சாம்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நொச்சிக் குப்பம் குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200 குடிசைவீடுகள் தீயில் கருகி சாம்பலாயின.
நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. தீ விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாகதீயணைப்புப் படை வீரர்கள் அங்கு விரைந்தனர்.
சென்னை மாநகர துணை மேயர் "கராத்தே" தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் கலைவாணன்,மாநகராட்சி 10வது மண்டல குழுத் தலைவர் ராஜேந்திர பாபு ஆகியோரும் சம்பவ இடத்திற்குவிரைந்தனர்
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 200 குடிசைகள் எரிந்து நாசமாகிவிட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவற்றை "கராத்தே" வழங்கினார்.
-->












Click it and Unblock the Notifications