அனைத்து கட்சி கூட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாஜ்பாய் மறுப்பு
டெல்லி:
ஈராக் போர் குறித்தும், இந்த விவகாரத்தில் இந்தியா எடுக்க வேண்டிய நிலை குறித்தும் பேச இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டினார். ஆனால், இதில் அமெரிக்காவைக் கண்டித்துத் தீர்மானம் போடவாஜ்பாய் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் எதிர்க் கட்சிகள் கோபத்துடன் வெளியேறின.
முன்னதாக கடந்த 10ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஈராக் போர் விவகாரம் குறித்து வாஜ்பாய்விளக்கினார். ஆனால், இதில் இந்தியாவின் நிலை என்ன, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் தான் பேசியதுஎன்ன போன்ற விளக்கங்களைத் தர வாஜ்பாய் மறுத்தார்.
இதனால் அமெரிக்க நெருக்குதலுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டதாகவும், புஷ்சுக்கு வாஜ்பாய் முழு ஆதரவுதெரிவித்துள்ளதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வாஜ்பாய் கூட்டினார். காலை 11 மணிக்குநாடாளுமன்ற வளாகத்தில் இக் கூட்டம் நடந்தது.
இதில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, வெளியிறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா,பாதுகாப்புத்துறை அமைத்தர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்படஅனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியாவின் நிலை குறித்து எதிர்க் கட்சிகளிடம் வாஜ்பாய் விளக்கினார். போரை இந்தியா ஆதரிக்கவில்லைஎன்றும், அமெரிக்காவுக்கு போர் விஷயத்தில் எந்த ஆதரவும் தரப்பட மாட்டாது என்றும் கூறினார்.
ஆனால், வாஜ்பாயின் இந்தப் பேச்சை எதிர்க் கட்சிகள் ஏற்கவில்லை. அமெரிக்காவுக்கு ஏதோ ஒருஉறுதிமொழியைக் கொடுத்துவிட்டு அதை மத்திய அரசு மறைப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் என எதிர்க் கட்சிகள் கூறின. ஆனால், அந்தத்தீர்மானத்தில் அமெரிக்காவை கண்டிக்கும் வாசகங்கள் இருக்கக் கூடாது என வாஜ்பாய் கூறினார். இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து அந்கக் கூட்டம் அரைகுறையாக முடிவடைந்தது. எதிர்க்கட்சியினர் அரசைக் கண்டித்துவிட்டுவெளியேறின.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications