குவைத் மீது ஈராக் இன்று மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

குவைத்:

குவைத் மீது இன்று காலை மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஈராக். இதனை அமெரிக்கப் படைகளின்பேட்ரியாட் ஏவுகணை சுட்டு வீழ்த்தியது.

இன்று காலை குவைத் முழுவதும் ஏவுகணை எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகள்,கட்டங்களுக்குள் ஓடி பதுங்கினர். ரசாயன ஆயுத முகமூடிகளை அணிந்தனர்.

எச்சரிக்கை ஒலி கிளம்பிய சில நிமிடங்களில் வடக்கு குவைத் பகுதியில் ஒரு ஈராக்கிய ஏவுகணை நுழைந்தது.இதனை பேட்ரியாட் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்யூசிவ் அல் முல்லா தெரிவித்தார்.

கடந்த வாரம் போர் தொடங்கியதில் இருந்து குவைத் மீது ஏவப்பட்ட 13வது ஏவுகணையாகும் இது.

இந் நிலையில் பிற்பகலிலும் அங்கு மீண்டும் ஏவுகணை எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஆனால், ஏவுகணைஏதும் தாக்கியதாக தகவல் இல்லை.

இந்திய- குவைத் விமான சேவை தொடரும்:

இதற்கிடையே இந்தியா- குவைத் இடையிலான வழக்கமான விமான சேவைகள் ரத்து செய்யப்படாது என இந்தியவிமானத்துறைச் செயலாளர் ராய்பால் குவைத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார். போர் காரணமாக இன்சூரன்ஸ்கட்டணம் மிக அதிகமாக உயர்ந்துவிட்டாலும் கூட விமான சேவைகளை ரத்து செய்யப் போவதில்லை என்றார்அவர்.

டெல்லி இமாமுக்கு விசா மறுப்பு:

இந் நிலையில் ஈராக் மீதான தாக்குலை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் டெல்லி ஜூம்மா மசூதியின் தலைமைஇமாம் சையத் அகமத் புகாரிக்கு விசா வழங்க குவைத் மறுத்துவிட்டது. அமெரிக்காவை ஆதரித்து வரும்அரேபிய நாடுகளை அவர் மிக வன்மையாக கண்டித்திருந்ததால் குவைத் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டும் கூட அவருக்கு விசா வழங்க இந்தியாவில் உள்ள குவைத் தூதரகம் மறுத்தது. இப்போது மீண்டும்மறுத்துள்ளது. இது குறித்து இமாமிடம் கேட்டபோது, நான் விசா கேட்டு விண்ணப்பம் போடவே இல்லை என்றார்.மேலும் குவைத்துக்கு எதிராக அந்தத் தூதரகத்தின் முன் என் தலைமையில் ஒரு போராட்டம் நடத்தவும்திட்டமிட்டுள்ளேன் என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+