18 வயதில் காதலா?- ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

9ஆம் வகுப்பு படிக்கும் தங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலித்த 18 வயது ஆட்டோ டிரைவரைஅப்பெண்ணின் அப்பாவும் சகோதரரும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

சென்னை அருகே உள்ள அம்பத்தூர்-வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட். 18 வயதாகும் இந்தஆட்டோ டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்புப் படித்து வரும் மாணவியை காதலித்துவந்தார். இவர்களது காதல் அந்தப் பெண்ணின் வீட்டுக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து பெண்ணின் தந்தை வாசுதேவன், சகோதரர் யுவராஜ் ஆகியோர் டேவிட்டைக்கூப்பிட்டுக் கண்டித்துள்ளனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் டேவிட் தொடர்ந்துஅப்பெண்ணைச் சந்திப்பதும் பேசுவதுமாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவனும் யுவராஜும் சேர்ந்து டேவிட் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது வழிமறித்து அவரைக் கத்தியால் சராமாரியாக் குத்தினர்.

"18 வயதிலேயே உனக்கு காதல் கேட்கிறதா?" என்று கேட்டுக் கொண்டே அவர்கள் டேவிட்டைகுத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குகொண்டு வரப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வாசுதேவனும் யுவராஜும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+