சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கும் குடிசைவாழ் மக்களுக்கும் இலவச மின்சாரத்திட்டம் தொடரும் என்றும் ஆனால் வசதி படைத்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம்ரத்து செய்யப்பட்டதைத் திரும்பப் பெற முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத்தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்க் கட்சிகளும், விவசாயஅமைப்புகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டு ஜெயலலிதாபேசுகையில்,
தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், குடிசைவாழ் மக்களுக்கும் இலவசமின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்திற்கு இதுவரை அளித்து வந்த மானியத்தைத் தொடர உலக வங்கி மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, சிறு மற்றும் குறு விவசாயிகள் நன்மைக்காக நேரடியாகவே தமிழக அரசுநிதியை ஒதுக்கியுள்ளது.
ஆனால் வசதி படைத்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடர முடியாதசூழ்நிலையில் அரசு உள்ளது. மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும் விவசாயிகளுக்கான மின்கட்டணங்கள் மற்ற மாநிலங்களை விடக் குறைவாகத்தான் உள்ளன.
தமிழக வறட்சி நிவாரண நிதியாக சுமார் ரூ.2,067 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால்வெறும் ரூ.258 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறதுஎன்றார் ஜெயலலிதா.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications