2 அமெரிக்க ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்திய ஈராக் விவசாயப் படை

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

US Helicopterஅமெரிக்காவின் 2 ஹெலிகாப்டர்களை ஈராக்கிய விவசாயிகள் படை சுட்டு வீழ்த்தியுள்ளது. அவற்றில் இருந்த 4வீரர்களை ஈராக் ராணுவம் சிறை பிடித்துள்ளது.

ஷியா இனத்தினரின் முக்கிய புனிதத் தலமான கர்பலா அருகே இந்த இரு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் ஒரு ஹெலிகாப்டரை ஈராக்கிய டிவி காட்டியது. அந்தஹெலிகாப்டர் வயல் வெளியில் விழுந்து கிடக்கிறது.

அதன் வெளியே பைலட்களின் ஹெல்மெட்டுகள் கிடக்கின்றன. ஹெலிகாப்டரில் இருந்த ஆவணங்களை ஈராக்கியஅதிகாரிகள் அள்ளிச் செல்வதும் காட்டப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் பல ஏவுகணைகளும் அப்படியேஉள்ளன. அதன் வெளியே 2 ஹெல்மெட்டுகளும் கிடக்கின்றன.

அவற்றை ஈராக்கிய வீரர்கள் கால்களால் உருட்டும் காட்சியையும் ஈராக்கிய டிவி காட்டியது.

இன்னொரு ஹெலிகாப்டர் எந்த இடத்தில் கிடக்கிறது என்பது தெரியவில்லை.

இதற்கிடையே இன்று நிருபர்களிடம் பேசிய ஈராக்கிய செய்தித்துறை அமைச்சர் சயீத் சகாப்,

எங்கள் படைகள் மட்டுமல்ல மக்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் கூட போர் பயிற்சி தரப்பட்டுள்ளது. அவர்கள்துப்பாக்கி மட்டுமல்ல வேறு ஆயுதங்களையும் இயக்கத் தெரிந்தவர்கள். இவர்களது எண்ணிக்கை பல லட்சத்தைத்தாண்டும்.

இப்படிப்பட்ட படைகளில் ஒன்று தான் விவசாயிகள் படை. அந்த விவசாயிகள் படை இரு அமெரிக்கஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. உள்ளே வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு எங்கள் மக்களின்கையால் சாவு காத்திருக்கின்றது.

சுட்டு வீழ்த்திய ஹெலிகாப்டர்களில் இருந்த 4 வீரர்களையும் சிறை பிடித்துள்ளோம். அவர்கள் மனிதாபிமானமுறையில் நடத்தப்படுவார்கள்.

முன்னதாக எங்களிடம் சிக்கிய அமெரிக்கப் படையினரையும் நல்லமுறையில் தான் நடத்தி வருகிறோம்.அவர்களை டிவி நிருபர்கள் முன் நாங்கள் விசாரிக்கவில்லை. இதனால் ஜெனிவா ஒப்பந்தத்தையும் மீறவில்லை.உலக விதிகளை மீறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும் நாங்கள் ஜெனிவா ஒப்பந்தத்தைமீறிவிட்டதாகக் குறை கூறுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. பிடிபட்ட இந்த அமெரிக்க வீரர்கள் உரியநேரத்தில் தொலைக்காட்சியில் காட்டப்படுவார்கள்.

நேற்றிரவு முதல் அமெரிக்கப் படைகளும் பிரிட்டிஷ் விமானங்களும் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 66 பேர்பலியாகி உள்ளனர். இதற்கு பழிக்குப் பழி வாங்காமல் விட மாட்டோம். நேற்று இரவு கர்பலா மற்றும் நஜாப்ஆகிய இடங்களில் பாராசூட்கள் மூலம் அமெரிக்கப் படைகள் தரையிறங்க முயன்றன. இதற்காக பலவாகனங்களையும் அவர்கள் தரையில் இறக்கினர். ஆனால், அவற்றை எங்கள் படைகள் சுற்றி வளைத்ததால் தனதுபடைகளை அமெரிக்கா தரையிறக்க முடியவில்லை.

இதன் பின்னர் தான் விமானங்களை அனுப்பி இந்த இடங்களில் தாக்குதல் நடத்தினர். ஆனால், எங்கள் படைகள்தப்பிவிட்டன என்றார்.

இன்று வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவின் கேவல்ரி படைகளுக்குச் சொந்தமானது என்றுதெரியவந்துள்ளது.

ஆனால், ஒரே ஒரு ஹெலிகாப்டர் தான் பாக்தாத் அருகே தரையில் இறக்கப்பட்டதாகவும் அதுவும் கூடதொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கியதாகவும் அதை யாரும் சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்பில்லைஎனவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+