காங்கிரஸ் மேலிடம் கண்டிப்பு: சோ.பா.-இளங்கோவன் சமரசம்
டெல்லி:
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் (சோ.பா.) மற்றும் செயல் தலைவர் இளங்கோவன்ஆகியோரை கட்சித் தலைவர் சோனியா காந்தி கண்டித்ததைத் தொடர்ந்து இருவரும் இணைந்துசெயலாற்ற முடிவு செய்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யும் விஷயத்தில் சோ.பாவுக்கும் இளங்கோவனுக்கும்இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏழு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை சோ.பா.அதிரடியாகப் பதவிகளிலிருந்து நீக்கினார்.
தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் இளங்கோவன் தன்னிச்சையாகச் செயல்பட்டு இவர்களைநியமித்திருந்ததாக சோ.பா. குற்றம் சாட்டினார். நீக்கப்பட்டவர்கள் அனைவருமே இளங்கோவனின்ஆதரவாளர்கள் ஆவர். இதனால் இளங்கோவன் வெகுண்டு எழுந்தார்.
குறிப்பிட்ட அந்த மாவட்டச் செயலாளர்கள் அவர்கள் பதவிகளிலேயே நீடிப்பார்கள் என்றுஇளங்கோவன் கூறினார். மேலும் அவர்களை நீக்குவதற்கு சோ.பாவுக்கு எந்தவிதமான அதிகாரமும்கிடையாது என்றும் அவர் கண்டித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் காங்கிரஸ் மேலிடத்தின் காதுகளுக்குச் சென்றது. இருவரையும்உடனடியாக டெல்லிக்கு வருமாறு சோனியா காந்தி அழைக்கவே நேற்று முன் தினம் சோ.பாவும்இளங்கோவனும் தனித் தனியாக அங்கு சென்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், செயலாளர்கள் ரமேஷ்சென்னிதாலா, நரேஷ் ராவல் ஆகியோர் முன்னிலையில் சமரசப் பேச்சு நடைபெற்றது. அப்போதுசோ.பாவும் இளங்கோவனும் நேருக்கு நேர் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிப் பேசினார்கள்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் மற்ற தலைவர்கள் கண்டித்தனர். இரண்டு தலைவர்களுமேஇப்படிச் சண்டை போட்டால் தொண்டர்கள் எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் அவர்கள்கடிந்து கொண்டனர்.
மேலும், இதுபோன்ற செயல்களில் இனிமேல் இருவரும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை செய்தகாங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், சோ.பாவும் இளங்கோவனும் இணைந்து செயல்பட வேண்டும்என்றும் அறிவுறுத்தினர்.
தவிர, இனிமேல் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடும்போது சோ.பாவும் இளங்கோவனும்சேர்ந்து கையெழுத்துப் போட்டுதான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இளங்கோவனின்ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் பட்டியலை சோ.பா. வெளியிடலாம் என்றும் இந்த சமரசப்பேச்சின்போது முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் மேலிடம் கூறிய இந்த நிபந்தனைகளை சோ.பா., இளங்கோவன் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டனர். இனி இருவரும் இணைந்தே செயல்படுவோம் என்றும் உறுதி அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் இருவரும் பேசியபோது, இந்த சமரசப் பேச்சுவார்த்தையின்போது பலவிஷயங்களை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களுக்குப் பல தெளிவுகளும் ஏற்பட்டுள்ளன.இனிமேல் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கூறினர்.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications