தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள் ஸ்டிரைக்
சென்னை:
மருந்துப் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரி விதிக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம்முழுவதும் உள்ள மருந்துக் கடை உரிமையாளர்கள் இன்று ஸ்டிரைக் நடத்தினர். இதனால் மருந்துக்கடைகள் மூடப்பட்டன.
சமீபத்தில் மத்திய அரசு மருந்துப் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரியை நிர்ணயம்செய்தது. இதை மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மருந்துப் பொருள்கள் மீதான மதிப்புக் கூட்டப்பட்ட வரியை நிர்ணயிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
இதை மருந்துக் கடை உரிமையாளர்கள் கடுமையாகக் கண்டித்தனர். இந்த மதிப்புக் கூட்டப்பட்டவரியால் மருந்து மற்றும் மாத்திரைகளின் விலைகள் பல மடங்கு உயரும் என்றும், இதனால்பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் 25ம் தேதி மருந்துக் கடைகள் ஸ்டிரைக்கில்ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகள் முழுஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
இதையொட்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருந்துக் கடைகள் இன்றுஅடைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் உள்ள சுமார் 4,000 மருந்துக் கடைகள் இன்றுஅடைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் திருச்சி, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட நகரங்களிலும் மருந்துக் கடைஉரிமையாளர்கள் கடைகளைப் பூட்டிவிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் மருந்துக் கடை உரிமையாளர்கள் பேரணி நடத்தினர். கரூரில்பேரணியாகச் சென்ற மருந்துக் கடை உரிமையாளர்கள் ஒரு கோவிலுக்குச் சென்று கடவுளிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
இதேபோல் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் மருந்துக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்களும் நோயாளிகளும் மருந்து, மாத்திரை வாங்க முடியாமல் அல்லாடிக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் மருந்துக் கடை உரிமையாளர்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications