மே 5 முதல் ஸ்டிரைக்: அரசு ஊழியர்கள் மிரட்டல்
சென்னை:
அரசு ஊழியர்களுக்கு அவர்களது சலுகைகள் அனைத்தையும் வரும் 31ம் தேதிக்குள் திரும்பவழங்காவிட்டால் மே 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகதமிழக அரசு ஊழியர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஒன்றியத்தின் தலைவர் சூரியமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
சரண் விடுப்பு, போனஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது. இவற்றை மார்ச் 31ம் தேதிக்குள் மீண்டும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மூன்றுகட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
முதல் கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருப்போம். பின்னர்10ம் தேதி முதல் 22ம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்களின் முன்பாகவும் வாயில்கூட்டங்கள் நடத்தப்படும்.
இறுதிக் கட்டமாக மே 5ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்சூரியமூர்த்தி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அப்போது சூரியமூர்த்திதலைமையிலான ஒன்றியம் திடீரென்று போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வாபஸ் பெற்றது.இவர்களது ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அந்த வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது.
இந்நிலையில் சூரியமூர்த்தி தலைமையிலான ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்தப்போராட்டத்திற்கு மற்ற அரசு ஊழியர் சங்கங்கள் எந்த அளவுக்கு ஆதரவு தரும் என்றுதெரியவில்லை. அந்த சங்கங்கள் சூரியமூர்த்தியின் அழைப்பை நிராகரிக்கும் என்றேஎதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications