கன்னியாகுமரியில் 30 பெண்களுக்கு "எய்ட்ஸ்"
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 பெண்கள் உள்பட 70 பேர் எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேபோகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 43,400 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது. நாமக்கல், திருச்சி,சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்என்றார் பேடி.
-->












Click it and Unblock the Notifications