வரதட்சணையா?- "மூச்" என்கிறார் ஜெ.
சென்னை:
பெரியார் பிறந்த இந்த மண்ணில் வரதட்சணை என்ற பேச்சே வரக் கூடாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை-கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டுஜெயலலிதா பேசுகையில்,
தமிழகத்தில் தொண்டர்களே இல்லாமல் தர்பார் நடத்தும் கட்சிகள் உண்டு. தொண்டர்கள் இருந்தும்தங்கள் குடும்பத்துக்காகக் கட்சியை நடத்துகின்ற கட்சிகளும் உண்டு. ஆனால்தொண்டர்களுக்காகவே ஒரு கட்சி நடத்தப்படுகிறது என்றால் அது அதிமுக மட்டுமே.
அதிமுக கழகக் குடும்பத்தினரின் இல்லத் திருமண விழாக்களில் நான் கலந்து கொள்வது எனக்குமகிழ்ச்சி அளிக்கிறது. இன்று மூன்று ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளேன். நான்இப்போது கூறப் போவது இந்த ஜோடிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்தான்கூறுகிறேன்.
திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமானது. குடும்பம் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கைமகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல் பெண்ணை மதிக்கிற குடும்பம்தான் உயர முடியும்.
ஒரு கதை சொல்கிறேன். ஒரு பக்தரின் வீட்டுக் கதவை திருமகள் வந்து தட்டுகிறாள். கதவைத் திறந்தபக்தரிடம், "நான் உனக்கு மகளாகப் பிறக்க ஆசைப்படுகிறேன். விருப்பமா?" என்று திருமகள்கேட்டாள்.
அந்த பக்தரோ, "நீ எனக்கு மகளாகப் பிறக்க வேண்டாம். மருமகளாக வா. ஏனென்றால் மகளாகப்பிறந்தால் வேறு வீட்டுக்கு நீ போய் விடுவாய். மருமகளாக வந்தால்தான் என் வீட்டிலேயேஇருப்பாய்" என்றார். உடனே அந்தத் திருமகளும் மருமகள் வடிவத்தில் அவர்கள் வீட்டுக்குள்வந்தாள்.
எனவே வீட்டுக்கு வரும் மருமகளை மாமனாரும் மாமியாரும் குடும்பத்தினரும் திருமகளாகியமகாலட்சுமியாகக் கருதி அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி என்பதற்காக அந்தமருமகளிடமிருந்தோ, அவர்களுடைய குடும்பத்தினரிடமிருந்தோ காரும் பங்களாவும் கேட்டுவிடாதீர்கள்.
பெரியார் பிறந்த இந்த மண்ணில் வரதட்சணை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது.பெண்ணை மதிக்கிற குடும்பமும் சமுதாயமும்தான் உயரும். ஆணும் பெண்ணும் சமம் என்பதையும்அனைவரும் உணர வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications