வைகோ கைதை எதிர்த்து உண்ணாவிரதம்: கருணாநிதி தொடக்குகிறார்- ராமதாஸ் முடிக்கிறார்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்ஆகியோரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதிதொடங்கி வைக்கும் அனைத்துக் கட்சியினர் உண்ணாவிரதத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்முடித்து வைக்கிறார்.
வைகோ மற்றும் நெடுமாறனை விடுதலை செய்யக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் தமிழகம்முழுவதும் வரும் 29ம் தேதி (நாளை மறுநாள்) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் எதிரே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நானே தொடங்கி வைப்பேன் என்று சமீபத்தில்கருணாநிதி கூறியிருந்தார்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைப்பார் என்று தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல்கூறப்பட்டுள்ளது.
வைகோ-அகாலி தள தலைவர் சந்திப்பு:
இதற்கிடையே சிரோண்மணி அகாலி தளத் தலைவரான சிம்ரஞ்சித் சிங் மான் வேலூர் சிறைக்குச்சென்று அங்கிருந்த வைகோவைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த மான் நிருபர்களிடம் கூறுகையில்,
வைகோ கைது கொஞ்சம் கூட நியாயம் இல்லாதது. அவர் சிறையில் சரிவரக் கவனிக்கப்படவில்லை.அவரைப் பொடா சட்டத்தில் கைது செய்ய நியாயமான காரணங்கள் இல்லை.
வைகோவிடம் எனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். வைகோ கைதுவிவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் பிரணாப் முகர்ஜிஆகியோரிடம் அறிக்கை தாக்கல் செய்வேன் என்றார் மான்.
மத்திய அரசு அமைத்துள்ள பொடா மறு ஆய்வுக் குழுவில் மானும் ஒரு உறுப்பினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் மான் பேசுகையில்,
எந்தவிதமான நிபந்தனையும் இன்றி வைகோவை விடுதலை செய்ய வேண்டும். வைகோ மீதானஅனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.
வைகோவை விடுவிப்பது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமானராம்ஜெத்மலானி மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் மான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இருந்தபோதிலும் வைகோ விடுதலை தொடர்பாக பா.ஜ.க.அரசு "ஒரு இஞ்ச்" கூட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை என்றும் மான் குற்றம் சாட்டினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications