"பாரபட்சமாக செயல்படுகிறார்": காளிமுத்து மீது ப.சி. பாய்ச்சல்
நாகர்கோவில்:
"சபாநாயகர் காளிமுத்து பாரபட்சமாக செயல்படுகிறார். எதிர்க் கட்சி உறுப்பினர்களை சட்டசபையில்பேசவே விடுவதில்லை" என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைபொதுச் செயலாளருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காளிமுத்து பாரபட்சமான போக்கைக் கடைப்பிடிக்கிறார். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கும்விளக்கம் கூறுவதற்கும் புகார்கள் தெரிவிப்பதற்கும் வாய்ப்பே தருவதில்லை. இது ஜனநாயகத்திற்குஆபத்தானது.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மாட்டோம் என்று அதிமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதிதரப்பட்டது. ஆனால் அது தற்போது மீறப்பட்டு விட்டது. அத்தோடு மின் கட்டணத்தையும் உயர்த்திமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி விட்டனர்.
மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டுதயாரிக்கபப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. எனவே இது சரியான பட்ஜெட்டே அல்லஎன்றார்சிதம்பரம்.
-->












Click it and Unblock the Notifications