திருந்தியது பா.ஜ.க: திருத்தப்பட்டது வைகோ மனு
டெல்லி:
புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது தவறு தான், அவரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததுதவறு தான் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு அதைத் திரும்பப்பெற்றுள்ளது.
இன்று மத்திய அரசு புதிதாக தாக்கல் செய்த மனுவில், புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதுதீவிரவாத செயல் அல்ல. அதை வைத்து வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாதுஎன்று விளக்கம் தந்துள்ளது.
மனுவை வாபஸ் பெறாவிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவோம் என திமுக,மதிமுக, பா.ம.க. ஆகியவை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததால் வாஜ்பாய் அரசுபணிந்துள்ளது.
பேச்சுரிமைக்கே தடையாக உள்ள பொடா சட்டத்தின் சர்ச்சைக்குரிய 21ம் பிரிவை நீக்கக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.அதில், கடந்த ஆண்டு திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வைகோபேசியது தீவிரவாதச் செயல்தான் என்றும், இதனால் அவரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததுசரிதான் என்றும் கூறியிருந்தது.
இதற்கு மதிமுக மற்றும் திமுக, பா.ம.க. இடையே கடும் கண்டனம் எழுந்தது. இந்த மூன்று கட்சிகளின்சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்ஜார்ஜ் பெர்னாண்டசிடம் பேசினார்.
எங்கள் ஆதரவும் வேண்டும், அதே நேரத்தில் எங்கள் முதுகிலேயே குத்துவீர்களா என்று பாலுநேரடியாகக் கேட்கவே இது குறித்து பிரதமருடன் பெர்னாண்டஸ் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து நேற்று பிரதமர் தனது இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக்கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். இக் கூட்டத்தில் திமுக அமைச்சர் டி.ஆர். பாலு மத்திய அரசைகடுமையாக விமர்சித்தார்.
நாங்கள் தேவையில்லை என்றால் சொல்லி விடுங்கள். அதைவிட்டுவிட்டு துரோக அரசியல்நடத்தாதீர்கள். உங்கள் செயலால் திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தியுடன் உள்ளார்.உங்களுடன் பேசக் கூட அவர் விரும்பவில்லை என்றார்.
இதையடுத்து அக் கூட்டத்தில் கனத்த அமைதி நிலவியது. கூட்டம் முடிந்தவுடன் பாலுவை மட்டும்பிரதமர் வாஜ்பாய் தனியே அழைத்துப் பேசினார். அப்போதும் கோபம் அடங்காத பாலு,கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதிலோ அமைச்சர் பதவிகளை விட்டு விலகுவதிலோஎங்களுக்கோ, மதிமுக, பா.ம.கவுக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.
இதையடுத்து துணைப் பிரதமர் அத்வானி, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பெர்னாண்டஸ்மற்றும் சட்டத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரையும் அழைத்த வாஜ்பாய் அவர்கள்முன்னிலையில் பாலுவுடன் பேசினார்.
அப்போது பாலுவை சமாதானப்படுத்திய அருண் ஜேட்லி, வைகோவுக்கு எதிராக தவறாக மனுசெய்துவிட்டோம். அதை உடனே திரும்பப் பெறுகிறோம். பொடா சட்டத்தின் 21வது பிரிவில்திருத்தம் கொண்டு வருவோம் என உறுதியளித்தார்.
மேலும் வைகோவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப்பெற்றுக் கொண்டு புதிய பதில் மனுவைத் தாக்கல் செய்வதாகவும் உறுதியளித்தார். கருணாநிதியுடன்பேசிவிட்டு பதில் தருவதாகக் கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார் பாலு.
இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,புலிகளை ஆதரித்து வைகோ பேசியது தீவிரவாதச் செயல் என்ற பாராவை நீக்கிவிடுமாறுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் மட்டும் அவர் மீது பொடாசட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் மத்திய அரசு தனது மனுவில் கூறியுள்ளது.
முன்னதாக திமுக, மதிமுக, பா.ம.கவை பா.ஜ.க. அரசு சீண்டிப் பார்த்தது. இக் கட்சிகள் விலகினால்தான் ஆதரவு தருவதாக அத்வானியிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளதால் இந்தச்செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
வைகோவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதில் மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜேட்லிக்குபெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தீவிரமான அத்வானி ஆதரவாளர். ஆனால்,வைகோவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தததை பிரதமரே விரும்பவில்லை. அவரது வற்புறுத்ததால்தான் மனுவைத் திரும்பப் பெற அத்வானி கோஷ்டி முன்வந்துள்ளது.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்படவிருந்த பிளவு தற்காலிகமாகதவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று தனது இல்லத்தில் கூட்டம் முடிந்தவுடன் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலிசொராப்ஜியை விட்டு ஒரு விளக்கமும் அளிக்க வைத்தார் பிரதமர் வாஜ்பாய். சொராப்ஜிகூறுகையில்,
மத்திய அரசின் பதில் மனுவில் ஏற்பட்டுள்ள தவறுக்கு என்னுடைய ஜூனியர் வக்கீல்கள்தான்காரணம். வைகோ தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளில் மட்டுமே தவறுஏற்பட்டு விட்டது என்றார்.
ஆனால், வைகோ போன்ற அரசியல முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் ஜூனியர் வக்கீல்கள்தவறான மனு செய்துவிட்டதாக தரப்படும் விளக்கம் ஏற்புற்குறியதாய் இல்லை. வைகோவுக்குஎதிராக நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் மனு தாக்கல் செய்தது அத்வானியின் வசம் உள்ளஉள்துறை அமைச்சகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications