மதிப்பு கூட்டு வரியை எதிர்த்து கடையடைப்பு: 50-50 வெற்றி
சென்னை:
மதிப்புக் கூட்டு வரியைக் கண்டித்து வணிகர்கள் நடத்தும் 2 நாள் கடையடைப்புப் போராட்டம்தமிழகம் முழுவதிலும் இன்று காலை தொடங்கியது.
அதேபோல் நாட்டின் பிற மாநிலங்களிலும் கூட இன்று காலை கடையடைப்புப் போராட்டம்தொடங்கியது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி முறை இருக்க வேண்டும் என்பதற்காக விற்பனை வரியை ரத்துசெய்து விட்டு அதற்குப் பதில் மதிப்புக் கூட்டு வரி விதிப்பை மத்திய அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது. அதை ஒவ்வொரு மாநிலமும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றுமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த மதிப்புக் கூட்டு வரி விதிப்பு நாடு முழுவதிலும் அமலுக்குவருகிறது.
விற்பனை வரியை ஒழித்துவிட்டு மதிப்புக் கூட்டு வரி விதிப்பைக் கொண்டு வருவது பலமுனைவரிக்கு வழி வகுக்கும், வணிகர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வணிகர்கள்கூறுகிறார்கள். எனவே மதிப்புக் கூட்டு வரி விதிப்பை வாபஸ் பெறக் கோரி இந்தியா முழுவதிலும்இரண்டு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நாடு முழுவதும் இன்று காலை கடையடைப்பு தொடங்கியது. ஆனால் தமிழ்நாடு வணிகர்சங்கங்கள் பேரவை சார்பில் தமிழகத்தில் நடந்து வரும் கடையடைப்பு போராட்டத்திற்கு 50 சதவீதம்மட்டுமே ஆதரவு இருந்தது.
சென்னை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், மளிகைக்கடைகள், பெட்டிக் கடைகள் என சகலவிதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
எப்போதும் "ஜே ஜே" என்று இருக்கும் கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் அனைத்துக் கடைகளும்மூடப்பட்டு மார்க்கெட்டே வெறிச்சோடிக் காணப்பட்டது.
இருப்பினும் தி. நகர், பாண்டி பஜார், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் கடைகள் திறந்தே இருந்தன.பல இடங்களில் பெட்டிக் கடைகளும் திறந்திருந்தன. ஹோட்டல்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாததால் பெரும்பாலான இடங்களில் அவையும் திறந்திருந்தன.
-சென்னையில் இந்த நிலைமை காணப்பட்டாலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இந்தக்கடையடைப்பிற்கு ஓரளவு மட்டும்தான் ஆதரவு உள்ளது.
கோயம்புத்தூரில் 70 சதவீதம் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், டீக்கடைகள், மருந்துக்கடைகள் மட்டம் வழக்கம் போல் திறந்துள்ளன. ஆனால் ஈரோடு மாவட்டத்திலோ சுமார் 90 சதவீதகடைகள் திறந்தே உள்ளன.
மாநிலத்தின் பல பகுதிகளில் மருந்துக் கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் வழக்கம் போல்திறந்துள்ளன.
ஆனாலும் திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம்வெற்றிகரமாக நடந்து வருவதாக வணிகர் சங்கப் பேரவை அறிவித்துள்ளது.
வர்த்தகக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளாததாலேயே இப்போராட்டம் 50 சதவீதம் தோல்வியடைந்துள்ளது.
கடையடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொசு வலை உற்பத்தியாளர்களும்...
இதற்கிடையே மத்திய அரசின் கலால் வரி விதிப்பைக் கண்டித்து கொசு வலை உற்பத்தியாளர்கள்நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.
மத்திய அரசின் மதிப்புக் கூட்டு வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள், மருந்துக் கடைக்காரர்கள்போராடி வருகிறார்கள். இரண்டு நாள் கடையடைப்பையும் தற்போது மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கலால் வரி விதிப்பைக் கண்டித்து விசைத் தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் போராடிவருகின்றனர். இந்த வரிசையில் தற்போது கொசு வலை உற்பத்தியாளர்களும் சேர்ந்துள்ளனர்.
கரூர், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளில் கொசு வலைகள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.இப்பகுதிகளில் மொத்தம் 10,000 கொசு வலை உற்பத்தி தறிகள் உள்ளன.
இது தவிர கொசு வலைக்கான நூல் தயாரிக்கும் 100 ஆலைகளும் உள்ளன. இந்தத் தொழிலை நம்பிஒரு லட்சம் பேர் வரை உள்ளனர்.
இந்நிலையில் கலால் வரி விதிப்பால் தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கொசு வலைஉற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசின் கலால் வரி விதிப்பைக் கண்டித்து நாளை முதல்காலவரையற்ற போராட்டத்தில் அவர்கள் குதிக்கிறார்கள்.
இதற்கிடையே விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் நாளை வேலைநிறுத்தம்மேற்கொள்கின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications