லீலாவதி கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள்- உயர் நீதிமன்றம் உறுதி
சென்னை:
மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட 6 பேருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை-வில்லாபுரம் பகுதி மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் லீலாவதி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியைச் சேர்ந்த இவர் குடிநீர்ப் பிரச்சினைக்காக போராடி வந்தார். குடிநீர் விநியோகத்தில்அப்பகுதியைச் சேர்ந்த சிலர் முறைகேடுகள் செய்ததைத் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி காலை 8 மணியளவில்லீலாவதி தெருவில் நடந்து சென்றபோது வழிமறித்து கத்திகள், அரிவாள்களால் தாக்கி அவரைப்பயங்கரமாகக் கொலை செய்தனர்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கியது இந்தக் கொலைச் சம்பவம். இதைத் தொடர்ந்துகருமலையான், முத்துராமலிங்கம், முருகன், மருது என்ற நல்லமருது, மீனாட்சி சுந்தரம், சோங்கன்ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் 6 பேருக்கும்ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தினகர் மற்றும் நீதிபதி பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கியபெஞ்ச், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 6 பேரின் குற்றமும் சந்தேகத்திற்கு இடமில்லாமல்நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்கிறோம் என்று தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் ஐ. சுப்ரமணியம் தெரிவிக்கையில், பட்டப்பகலில் பொதுமக்கள் கண் முன் ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்றது மன்னிக்க முடியாத செயல் என்றார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து குற்றவாளிகளின் குடும்பத்தினரால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் இருக்கும் பொருட்டு, லீலாவதியின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வில்லாபுரம் பகுதியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications