எஸ்.சி.வி.-ஸ்டார் டி.வி. மோதல்: நாளை சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்
சென்னை:
சன் டி.விக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷனுக்கும் (எஸ்.சி.வி.) ஸ்டார் டி.விக்கும் இடையேஏற்பட்டுள்ள மோதலால் தவித்து வரும் சென்னை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நாளை வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின்பெரும்பாலான பகுதிகளில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு எஸ்.சி.விதான்சாட்டிலைட் டி.வி. ஒளிபரப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஸ்டார் டி.வி. சானல்கள் சமீபத்தில் பே சானல்களாக மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு இணைப்புக்கும் இவ்வளவு தர வேண்டும் என்று ஸ்டார் டி.வி. நிறுவனம்கட்டணம் நிர்ணயித்தது.
ஆனால் அதை ஏற்க எஸ்.சி.வி. மற்றும் பிற கேபிள் டி.வி. நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு ஸ்டார் டி.வி. சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. பின்னர்பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் ஸ்டார் டிவி சானல்கள் தெரிய ஆரம்பித்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் எஸ்.சி.விக்கும் ஸ்டார் டி.விக்கும் இடையே பிரச்சனைவெடித்துள்ளது. எஸ்.சி.விக்கு தன் சேனல் ஒளிபரப்பைத் தர ஸ்டார் டி.வி. நிறுவனம் மறுத்துள்ளது.கடந்த மூன்று மாதங்களாகச் செலுத்த வேண்டிய தொகையை எஸ்.சி.வி. செலுத்தவில்லை என்றுஸ்டார் டி.வி. குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து ஸ்டார் டி.வி. தன்னுடைய ஒளிபரப்புகளை மீண்டும் "கட்" செய்துள்ளது. சென்னையில்60 சதவீத பகுதிகளும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களிலும் ஸ்டார் டி.வி.சானல்கள் தெரியவில்லை.
ஸ்டார் பிளஸ், ஸ்டார் நியூஸ், ஸ்டார் மூவீஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கோல்டு, ஸ்டார் வேர்ல்டு,ஸ்டார் விஜய், சேனல் வி, நேஷனல்ஜியாகிராபிக் ஆகிய பிரபலமான ஸ்டார் டி.வி. சானல்களின்ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்த சானல்களை ஒளிபரப்பாவிட்டால் அதற்குத் தகுந்தவாறு குறைந்த கட்டணத்தைத்தான்கொடுப்போம் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் பொதுமக்கள் கறாராகக் கூறிவிட்டனர்.
இதனால் நொந்து போன சென்னையைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நேற்று அவசரமாகக்கூடி விவாதித்தனர்.
"ஸ்டார் டி.வியும் எஸ்.சி.வியும் தங்களுக்கு இடையே உள்ள தகராறை உடனடியாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி ஏப்ரல் 3ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்படும்" என்று இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் பிறகும் இரு நிறுவனங்களும் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாள் அடையாளஉண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முடிவுசெய்துள்ளனர்.
அப்படியும் நிலைமை சரியாகவில்லை என்றால் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதிதமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. ஒளிபரப்பை நிறுத்துவோம் என்று கேபிள் டி.வி. ஒருங்கிணைப்புகுழு தலைவரான ஜான் பீட்டர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications