அமெரிக்கப் படைகள் மீது ஈராக் ஏவுகணைத் தாக்குதல்
கர்பலா:
ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரான கர்பலாவில் கடும் மோதல் நடந்து வருகிறது. இங்குஅமெரிக்கப் படைகளை ஈராக்கின் ரிபப்ளிகன் படைப் பிரிவுகள் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு வருகின்றன.
ரிபப்ளிகன் படைகளை பலவீனப்படுத்த அமெரிக்க விமானங்கள் கடும் குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.மேலும் ஏவுகணைத் தாக்குதலும் நடத்த்பட்டு வருகிறது.
நசிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈராக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தஏவுகணையில் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அமெரிக்கப் படைகள் முகமூடிகளை அணிந்தன.ஆனால், அதில் ரசாயன ஆயுதங்கள் ஏதும் இல்லை.
இத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியானார்களா என்று தெரியவில்லை.
அதே போல திவானியா என்ற இடத்தில் ரிபப்ளிகன் படைகளுக்கும் அமெரிக்க மெரைன் படைப் பிரிவுகளுக்கும்இடையே 8 மணி நேரம் சண்டை நீடித்தது. இங்கு மட்டும் 80 ஈராக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 23 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈராக் கூறியுள்ளது. 35 டாங்குகளும் ஒரு அபாச்சிஹெலிகாப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஈராக் தெரிவித்துள்ளது.
திவானியா அருகே குட் என்ற இடத்தில் உள்ள ஈராக்கியப் படைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடர்ந்துகொண்டுள்ளது. இங்கு காலத் சுக்கார் என்ற இடத்தில் உள்ள விமான தளத்தையும் அமெரிக்கப் படைகள்கைப்பற்றியுள்ளனர்.
பாஸ்ராவில் பிரிட்டிஷ் படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது.இந்த நகரில் உள்ளே பிரிட்டிஷ் படைகளை நுழைய விடாமல் ஈராக்கியப் படைகள் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றன.
பாக்தாத் நகரில் வழக்கம்போல் அதிபர் சதாம் ஹூசேனின் மாளிகை மீது ஏவுகணை, விமான குண்டுவீச்சுத்தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
நசிரியாவில் அமெரிக்க மெரைன் படையின் 15வது பிரிவான எகோ கம்பெனிக்கும் ஈராக்கியப் படைகளுக்கும்இடையே போர் நடந்து வருகிறது. இந்த நகரின் வெளிப் பகுதியில் உள்ள போலீஸ் வளாகத்தை அமெரிக்கப்படைகள் கைப்பற்றிவிட்டன.
இந்த நகரில் அமெரிக்காவின் யு.எச்.-1 ரக போக்குவரத்து ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில்எத்தனை பேர் பலியானார்கள் என்று தெரியவில்லை.
கர்பாலா அருகே நடந்த மோதலில் ஈராக்கிய வீரர்களிடம் சிறைபட்டிருந் ஒரு அமெரிக்க வீரரை மெரைன்படைகள் மீட்டன. ஜெசிக்கா லின்ச் என்ற அந்த 19 வயது அமெரிக்க வீராங்கனை கடந்த 7 நாட்களாக ஈராக்கியப்படைகளிடம் சிறைபட்டிருந்தார்.
கர்பாலாவைத் தாக்கிக் கொண்டே அமெரிக்கப் படைகள் தென் பகுதியில் இருந்து பாக்தாத் நோக்கி மெதுவாகமுன்னேறி வருகின்றன. அதே நேரத்தில் வடக்குப் பகுதியில் இருந்து 1,000 கமாண்டோ படைகளும், மேற்குப்பகுதியில் இருந்து பிரிட்டிஷ் படைகளும் ஈராக்கை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளன.
தென் பகுதியில் பாக்தாதுக்கு 45 கி.மீ. வரை அமெரிக்கப் படைகள் முன்னேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இன்று துருக்கி வந்தார். வட பகுதியில்இருந்து பாக்தாதைத் தாக்க அமெரிக்கத் தரைப் படையை துருக்கியில் செயல்பட அவர் அனுமதி கோருவார் என்றுதெரிகிறது.
இது தவிர குர்து இனத்தினருக்கு எதிராக தனது படைகளை ஈராக்குக்குள் அனுப்ப வேண்டாம் எனவும் அவர்துருக்கிக்கு கோரிக்கை வைப்பார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications