குடிநீர் பஞ்சம்: மதுரை, திருப்பூர், திருச்சியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மதுரை:
தமிழகத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. பல ஊர்களில்நூற்றுக்கணக்கான பெண்கள் காலி குடங்களுடன் நடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில்ஈடுபட்டனர்.
கோடை காலம் முழு வீச்சில் தொடங்கி விட்டதையடுத்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. சில இடங்களில் கடந்த 15 நாட்களாக குடிநீர்விநியோகமே இல்லை.
இதையடுத்து பொதுமக்கள் பொங்கி எழுந்து காலிக் குடங்களுடன் நடு வீதிக்கு வந்து போராட்டம்நடத்தி வருகின்றனர்.
மதுரையில்...
மதுரை-வண்டியூர் பகுதியில் குடிநீர் கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் கடந்த பல நாட்களாகக் குடிப்பதற்கு உப்பு நீர்தான் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த உப்பு நீர் கூட விநியோகம் செய்யப்படவில்லை. இதனால்அங்குள்ள மக்கள் மிகவும் கொதித்துப் போனார்கள்.
நூற்றுக்கணக்கான மக்கள் மந்தைத் திடல் அருகே உள்ள சாலையில் திரண்டனர். பின்னர் காலிக்குடங்களுடன் அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும், சில அரசியல்வாதிகள் தங்களுக்கு ஓட்டுப் போடவில்லைஎன்பதால் பழி வாங்குவதற்காகவே எங்களுக்கு குடிநீர் கொடுக்காமல் இருந்து வருகின்றனர் என்றுகுற்றம் சாட்டினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றனர்.
திருப்பூரில்...
இதற்கிடையே திருப்பூரிலும் குடிநீர் கேட்டு 200 பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழுகம்பாளையம் மற்றும் ஆலங்காடு பகுதிகளில் கடந்த பல நாட்களாகவே குடிநீர்விநியோகிக்கப்படவில்லை.
இதையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 பெண்கள் கழுகம்பாளையம் சாலைச் சந்திப்பில்சென்று அமர்ந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு நடத்தினர். குடிநீர்வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட பின்னரே அந்தப் பெண்கள் தங்கள் போராட்டத்தைக்கைவிட்டு கலைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
திருச்சியில்...
இதற்கிடையே திருச்சி அருகே உள்ள அபிராமபுரத்திலும் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.
குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர் கூட விநியோகம் செய்யப்படவில்லை என்று மக்கள் புகார் கூறினர்.
மேலும் அரசு குடிநீர் வழங்காததால் பல தனியார் நிறுவனங்கள் லாரிகளில் குடிநீர் விநியோகம்செய்வதாகக் கூறிக் கொண்டு கொள்ளை கொள்ளையாகச் சம்பாதித்து வருவதாகவும் அவர்கள்குற்றம் சாட்டினர்.
சாலை மறியல் காரணமாக இப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால்வேகமாகத் தலைகாட்டி வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications