போர் முனையில் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்த இந்திய டாக்டர்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்காக போர் செய்திகளை சேகரிக்க பாக்தாத் சென்றுள்ள இந்தியரான டாக்டர் சஞ்சய்குப்தா, போரில் காயமடைந்த ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்தார்.
நேற்று ஈராக்கில் அமெரிக்க மெரைன் படைகள் பொது மக்கள் வந்த ஒரு கார் மீது நடத்திய தாக்குதலில் 2 பேர் இறந்தனர். பலர்காயமடைந்தனர். இதில் இரண்டு வயது ஆண் குழந்தைக்கு மூளையில் குண்டு பாய்ந்தது.
இந்தக் குழந்தைக்கு கடற்படையின் நடமாடும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. டாக்டர் சஞ்சய் குப்தா இந்தஅறுவை சிகிச்சையை செய்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை இறந்துவிட்டது.
-->












Click it and Unblock the Notifications