வெள்ளையன் ஜாமீன் மனு தள்ளுபடி: விடுதலை கோரி வணிகர்கள் தொடர் உண்ணாவிரதம்
சென்னை:
வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனை விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் வணிகர்கள் இன்றுஉண்ணாவிரதம் இருந்தனர்.
மதிப்புக் கூட்டு வரி விதிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய இரு நாட்களிலும்கடையடைப்பு நடந்தது.
அப்போது சென்னையில் கடைகளை மூடுமாறு கூறியதாக வெள்ளையன் நள்ளிரவில் அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார். அதைக் கண்டித்து சில பகுதிகளில் மேலும் ஒரு நாள் கடையடைப்பு நடந்தது. நேற்றும் சிலஇடங்களில் வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வணிகர் சங்கப் பேரவை நிர்வாகிகள்அழைப்பு விடுத்திருந்தனர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் எதிரே உண்ணாவிரதம் இருக்க அவர்கள் முடிவுசெய்திருந்தனர்.
ஆனால் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து வில்லிவாக்கத்தில் உள்ள பேரவைக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தில் பேரவைநிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை தொடங்கினர்.
பேரவை நிர்வாகி அப்பாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 300 பேர் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
அதேபோல் மதுரையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தல்லாகுளத்தில் உள்ள தலைமை தந்திஅலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடந்தது.
மேலும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளையன் கைதைக் கண்டித்து இன்று கடையடைப்புபோராட்டம் நடைபெற்றது.
வெள்ளையனை விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
வெள்ளையன் ஜாமீன் மனு தள்ளுபடி:
இதற்கிடையே ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி வெள்ளையன் தரப்பில் எழும்பூர் மெட்ரோபாலிடன்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
கடையடைப்பின்போது ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications