தீயணைப்புத்துறை ஊழல்: 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் கடுங்காவல் தண்டனை
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் தீயணைப்புத் துறைக்கு சாதனங்கள் வாங்கியதில் நடந்த ஊழலில் ஐ.பி.எஸ். அதிகாரிகளானஹரிஹரானே மற்றும் வீரராகவன் ஆகிய இருவரும் குற்றவாளிகளே என தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருவருக்கும் 2 வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1989 முதல் 1992ம் ஆண்டு வரை இருவரும் அடுத்தடுத்து இந்தத் துறையின் இயக்குனர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் தீயணைப்புத்துறைக்கு ரூ. 1.77 கோடி மதிப்புக்கு பல்வேறு சாதனங்கள் வாங்கப்பட்டன. இதற்கு டெண்டர் விட்டதில்இதில் பெரும் முறைகேடு நடந்தது.
இருவருமே நிஸார்ஸ் என்ற ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கே டெண்டரை வழங்கி அந்த நிறுவன அதிபர் ஜியாதீனிடம் இருந்துபல லட்சத்தை லஞ்சமாகப் பெற்றனர்.
இதையடுத்து அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு இவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை தனிநீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் முன் நடந்து வந்தது.
இந்த வழக்கில் அவர் இன்று தீர்ப்பளித்தார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
இந்த இரு அதிகாரிகளும் மக்கள் பணத்தை சுருட்டியது உறுதியாகிவிட்டது. இதனால் ஹரிஹரானேவுக்கு ரூ. 50,000மும்வீரராகவனுக்கு ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கிறேன். இருவருக்கும் தலா இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும்விதிக்கிறேன்.
அரசுப் பணத்தை முறைகேடாக சுருட்ட நினைத்த நிஸார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கு 4 வருட கடுங்காவல்தண்டனையும், ரூ. 90,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தீயணைப்புத்துறையின் பியூனான பட்டாபிராமனுக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பில்லை என்பதால் அவரைஇந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்.
ஹரிஹரானே, வீரராகவன் ஆகிய இருவரும் இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அதுவரைஇந்த தண்டனை அமலாக்கத்தை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறேன் என நீதிபதி கூறினார்.
-->












Click it and Unblock the Notifications