பாக்தாதுக்குள் அமெரிக்கப் படைகள்?
பாக்தாத்:
பாக்தாத் நகருக்குள் நுழைந்துவிட்டதாகவும் அங்கு தங்களுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருவதாகவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. ஆனால், இதை ஈராக் மறுத்துள்ளது.பாக்தாதில் உள்ள சர்வதேச பத்திரிக்கையாளர்களும் மறுத்துள்ளனர்.
நேற்று சர்வதேச விமான நிலையத்தின் பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டதாகக் கூறும் அமெரிக்கப் படைகள் இப்போது 3 பெரும் குழுக்களாகப் பிரிந்து பாக்தாதை நகரைசுற்றி வளைத்து வருவதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவின் 3வது இன்பான்ட்ரி படையின் 2வது பிரிகேட் படை தென் மத்திய பாக்தாதுக்குள்நுழைந்துள்ளது. இந்தப் படைகளை ஈராக்கின் ரிபப்ளிகன் கார்ட் படைகள் எதிர்த்துத் தாக்கி வருகின்றன. இதனால்பாக்தாதில் கடும் சண்டை மூண்டுள்ளது என கத்தாரில் உள்ள அமெரிக்கப் படைகளின் தலைமையகம்கூறியுள்ளது.
30 டாங்கிகளைக் கொண்ட ஒரு படைப் பிரிவு யூப்ரிடிஸ் நதியை ஒட்டியுள்ள பாக்தாத் பல்கலைகழகத்தின்அருகே ஈராக்கியப் படைகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
ஈராக்கியப் படைகளை அமெரிக்க விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தாக்கி வருவதாகவும் கூறியுள்ளது.ஆனால், அமெரிக்கப் படைகளை பாக்தாத் நகரில் எங்கும் பார்க்க முடியவில்லை என அந்த நகரில் உள்ளசர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
பி.பி.சி. நிருபர் ராகி ஒமர் கூறுகையில், இன்று காலை முதல் பாக்தாதின் பல்வேறு பகுதிகளை பிற நிருபர்களுடன்சேர்ந்து நான சுற்றி வந்தவண்ணம் உள்ளேன். ஆனால், அமெரிக்கப் படைகளை இங்கு பார்க்கவே முடியவில்லை.நகரில் யாரும் பதற்றத்துடனும் இல்லை. போர் பயமும் இல்லை. யாரும் ஊரை விட்டு ஓடவும் இல்லை. இங்குஇன்றைய நிலவரப்படி அமைதியான சூழ்நிலையே நிவவுகிறது என்றார்.
ஆனால், புறநகர்ப் பகுதியில் நேற்றிரவில் இருந்தே பெரும் சத்தம் கேட்பதாகவும் அங்கு குண்டு வெடிப்புகளும்துப்பாக்கிச் சத்தமும் கேட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனால், அமெரிக்கப் படைகள் இப்போதும்பாக்தாதின் வெளிப் பகுதியில் தான் உள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் காரணமாக ஈராக்கின் ரிபப்ளிகன் கார்ட் படைகளின் பலம்பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டதாகவும் இதனால் பாக்தாதை மிக விரைவிலேயே பிடித்துவிட முடியும் எனவும்அமெரிக்கப் படைகள் கூறுகின்றன.
ரிபப்ளிகன் படையின் மெதினா பிரிவுப் படைகளை பெரிய மோதல் ஏதும் இல்லாமல் பிடித்துவிட்டதாகவும்அமெரிக்கா கூறுகிறது.
பாக்தாதின் மத்தியப் பகுதியில் இப்போது சண்டை நடந்து வருவதாகவும் அங்கு சதாமின் ஆட்சி கிட்டத்தட்டவிழுந்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications