தமிழகத்தில் தலித்களுக்கான ரிசர்வ் தொகுதிகள் விரைவில் அதிகரிப்பு
சென்னை:
சட்டமன்றத்துக்கு அதிக தலித் எம்.எல்.ஏக்களைத் தேர்வு செய்யும் வகையில் அவர்களுக்கான ரிசர்வ்தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தேர்தல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் நிதியமைச்சர் பொன்னையன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொன்யைன் கூறுகையில்,
2026ம் ஆண்டு வரை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள தொகுதி வரையறை ஆணையம்கூறிவிட்டது.
எனவே சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடியாது.
இருப்பினும் ரிசர்வ் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தலாம் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.தற்போது தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள்உள்ளன. 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
இவற்றில் தாழ்த்தப்பட்டோருக்கான சட்டசபை ரிசர்வ் தொகுதிகளின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. இதை 45ஆக உயர்த்தலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல பழங்குடியினருக்கான ரிசர்வ் தொகுதிகளின்எண்ணிக்கை 3லிருந்து 2 ஆகக் குறைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகள் ஏற்கப்படும். தலித்களுக்கான ரிசர்வ் தொகுதிகள் 45 ஆக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 4,92,35,702 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,50,34,660 பேர் பெண்வாக்காளர்கள்.
இதுவரை மொத்தம் 3.28 கோடி வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனஎன்றார் பொன்னையன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications