நெடுமாறனுக்கு ஜாமீன் கிடைக்குமா?: 10ம் தேதி தெரியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் சிறைக்காவல் ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது வரும் 10ம் தேதிமுடிவு அறிவிக்கப்படும் என பொடா நீதிமன்றம் அறவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறது.

இந் நிலையில் பழ.நெடுமாறன் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரது காவலை ஏப்ரல்23ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

மேலும் பழ.நெடுமாறன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு தொடர்பாக ஏப்ரல் 10ம் தேதியன்று முடிவு செய்யப்படும்என்றும் அறிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பொடாநீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து பொடா நீதிமன்றத்தில் தனதுஜாமீன் மனுவை அவர் தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனு தாக்கல் செய்ய நெடுமாறனுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி தந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மீதான தீர்ப்பும் 10ம் தேதி தான் வழங்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இதனால் நெடுமாறன் ஜாமீனில் வெளியே வர முடியுமா இல்லையா என்பது வரும் 10ம் தேதி தெரிந்துவிடும்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+