சந்திரிகா நாளை சென்னை வருகை: ஜெயாவை சந்திக்கிறார்
சென்னை:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா டெல்லி செல்லும் வழியில் நாளை சென்னை வருகிறார்.
4 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியாவிற்கு வருகிறார் சந்திரிகா.
டெல்லி செல்வதற்கு முன் காலை 9.05 மணிக்கு சென்னை வரும் சந்திரிகா, விமானநிலையத்திலிருந்து நேராக ஆளுநர் மாளிகை செல்கிறார்.
அங்கு ஆளுநர் ராமமோகன் ராவையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப்பேசவுள்ளார் சந்திரிகா.
பின்னர் நாளை மாலை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் சந்திரிகா. ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும்சந்திரிகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தைகள் குறித்து சந்திரிகா இந்தியத் தலைவர்களிடம் விவாதிக்க உள்ளார். மேலும் ஈராக்போர் மற்றும் இந்தியா-இலங்கை இடையிலான உறவுகள் குறித்தும் சந்திரிகா பேச உள்ளார்.
சந்திரிகா வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
சந்திரிகாவுடன் முன்னாள் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் உள்ளிட்டஅதிகாரிகளும் இந்தியா வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications