""எங்கே கிருஷ்ணா நீர்?""- திமுகவுக்கு ஜெ. கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிருஷ்ணா நதி நீர் திட்டம் நிறைவேறியதாக கூறிக் கொள்ளும் திமுகவினர் பின்னர் ஏன் இதுவரைதண்ணீர் வரவில்லை என்பதை விளக்குவார்களா என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

சட்டசபையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது.அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,

கடந்த திமுக ஆட்சியின்போது கிருஷ்ணா நதி நீர்த் திட்டம் நிறைவேறியதாகவும் உடனடியாகதண்ணீர் வந்து விடும் என்றும் திமுகவினர் கூறினர். அப்போதைய முதல்வர் கருணாநிதியும்அவ்வாறே கூறினார்.

ஆனால் இதுவரை கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வரவில்லை. தண்ணீர் ஏன் வரவில்லை என்பதைகருணாநிதி விளக்குவாரா?

இதிலிருந்தே திமுகவினர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி சென்னை மக்களையும்,தமிழக மக்களையும் ஏமாற்றியுள்ளனர் என்பது நன்றாகத் தெரியும்.

அதேபோல, சேது சமுத்திரத் திட்டம் ஏதோ தங்களால்தான் அமலுக்கு வந்துள்ளது என்று சில கட்சிகள்கூறி வருகின்றன. உண்மையில் கடந்த 1998ம் ஆண்டு மத்தியில் கூட்டணி ஆட்சியில் அதிமுகஇடம் பெற்றிருந்தபோது பிரதமர் வாஜ்பாயியிடம் கூறி இத்திட்டத்தை தேசிய செயல் திட்டத்தில்இடம்பெறச் செய்ததே நான்தான் என்றார் ஜெயலலிதா.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+